ராம் ஜென்மபூமி பகுதியிலிருந்து 25 கி.மீட்டர் தொலைவில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம்……. உ.பி. அரசு ஒதுக்கீடு….

  0
  5
  யோகி ஆதித்யநாத்

  ராம் ஜென்மபூமி பகுதியிலிருந்து 25 கி.மீட்டர் தொலைவில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை உத்தர பிரதேச அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

  ராம ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கு பல பத்தாண்டுகளாக ஜவ்வாக இழுத்து கொண்டே வந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 9ம் தேதியன்று இந்த வழக்கில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தில் இந்துக்கள் கோயில் கட்டி கொள்ளலாம். அதேசமயம் வேறு பகுதியில் மசூதி கட்டி கொள்ள முஸ்லிம் சமுதாயத்தினர் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.

  அயோத்தி வழக்கு

  இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ராம் கோயில் கட்டுமான பணிகளை கண்காணிப்பதற்காக 15 உறுப்பினர்கள் கொண்ட  அறக்கட்டளை குழு குறித்து பிரதமர்  நரேந்திர மோடி  நேற்று அறிவித்தார். அதற்கு அடுத்த சில மணி நேரங்கள் கழித்து, முஸ்லிம் மக்கள் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு ஒதுக்கீடு செய்தது. உ.பி. அரசு ஒதுக்கீடு செய்துள்ள 5 ஏக்கர் நிலம் ராம் ஜென்மபூமியிலிருந்து 25 மீட்டர் தொலைவில் உள்ளது.

  தனிபூர்

  மசூதி கட்டுவதற்காக  உ.பி. சன்னி மத்திய வக்பு வாரியத்திடம் 5 ஏக்கர் நிலத்தை கொடுப்பதற்கு உத்தர பிரதேச மாநில அமைச்சரவை நேற்று ஒப்புதல் கொடுத்தது. இது குறித்து உ.பி.அரசின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், அயோத்தி (பாசிதாபத்) மாவட்ட தலைமை அலுவலகத்திலிருந்து 18 கி.மீட்டர் தொலைவில், அயோத்தியின் சோஹாவால் தெஹ்ஸில் உள்ள தனிபூர் கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்திலிருந்து 2 கி.மீ்ட்டர் தொலைவில் லக்னோ-கோரக்பூர் நெடுஞ்சாலை உள்ளதால் மசூதிக்கு மக்கள் வந்து செல்வது வசதியாக இருக்கும் என தெரிவித்தார்.