ராம்கோபால் வர்மா வெளியிடும் சந்திரபாபு நாயுடுவின் 6 வினாடி அதிர்ச்சி வீடியோ…

  0
  4
  ராம்கோபால் வர்மா

  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விரட்டி விரட்டி ட்விட் போட்டு வரும் இயக்குநர் ராம்கோபால் வர்மா இன்று ஒரு ஆறு வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை இன்னும் கதிகலங்க வைத்திருக்கிறார்.

  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை விரட்டி விரட்டி ட்விட் போட்டு வரும் இயக்குநர் ராம்கோபால் வர்மா இன்று ஒரு ஆறு வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ ஒன்றை வெளியிட்டு அவரை இன்னும் கதிகலங்க வைத்திருக்கிறார்.

  ram gopal varma

  நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் 175 க்கு 145க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ்.ஆர் காங்கிரஸ். சந்திரபாபு நாயுடுவை ஜெகன் எந்த அளவுக்கு எதிரியாக நினக்கிறாரோ தெரியாது. ஆனால் இயக்குநர் ராம்கோபால் வர்மா அவரை தனது ஜென்ம எதிரியாக நினைத்து ட்விட்டரில் தொடர்ந்து காரசாரமான பதிவுகள் போட்டுவருகிறார். காரணம் ஊர் அறிந்தது. வர்மா கடைசியாக இயக்கிய படமான ‘லட்சுமி பார்வதி’யை ஆந்திர தியேட்டர்களில் ரிலீஸாகவிடாமல் படாதபாடு படுத்தினார் நாயுடு.

  Present position pic.twitter.com/gXB0wpmyTn

  — Ram Gopal Varma (@RGVzoomin) May 24, 2019

  நேற்று தேர்தல் முடிவுகள் வந்தவுடனேயே தெலுகு தேசம் கட்சிக்கு ‘காரியம்’ பண்ணிவைத்த வர்மா, கட்சி பிறந்த தேதி இறந்த தேதி என்றெல்லாம் பதிவிட்டவர் இன்று தனது ஆத்திரம் கொஞ்சமும் அடங்காமல் சந்திரபாபுவின் இன்றைய நிலைமை என்ற தலைப்பில் அவரைப் போன்றே தோற்றம் கொண்ட ஒருவர் ஒரு சாதாரண ஓட்டலில் ஊறுகாய் சர்வ் செய்யும் ஆறு வினாடிகள் மட்டுமே ஓடக்கூடிய வீடியோ ஒன்றைப் பதிவிட்டு எக்காளச் சிரிப்பு சிரிக்கிறார்.