ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை என்று அறிவித்த பிரதமர் மோடி! – டெல்லி சட்டமன்ற தேர்தல் காரணமா?

  0
  6
  modi

  டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை உருவாக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்னும் ஒரு சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை உருவாக்க முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. மேலும், மூன்று மாதங்களில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட நிலம் வழங்க வேண்டும், ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

  modi

  இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய மோடி, “எனது அரசாங்கம் ஶ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா என்னும் அறக்கட்டளையை உருவாக்க முடிவெடுத்துள்ளது. இந்த அறக்கட்டளை ராமர் கோவில் கட்டுவதற்கும் அது சம்பந்தமான மற்ற விவரங்களை குறித்தும் சுதந்திரமாக முடிவெடுக்கும். அயோத்தியில் மிகப் பெரும் ராமர் கோவில் கட்டுவதற்கு நாம் அனைவரும் நமது ஆதரவைத் தருவோம்” என்றார். உடனே நாடாளுமன்ற பா.ஜ.க உறுப்பினர்கள் உறுப்பினர்கள் ஜெய் ஶ்ரீராம் என்று கோஷங்களை எழுப்பினர்.

  modi

  தொடர்ந்து பேசிய மோடி, “சன்னி வாக்ஃப் வாரியத்துக்கு அயோத்தியில் ஐந்து ஏக்கர் நிலத்தை ஒதுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு உத்தரப்பிரதேச அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு படியே அறக்கட்டளை அமைக்கப்பட உள்ளது” என்றார்.

  ayodhya

  டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ளது. இதில் பா.ஜ.க-வுக்கு வெற்றி வாய்ப்பு இல்லை என்று பல கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. இந்த நிலையில் பல ஸ்டண்ட் வேலைகளில் பா.ஜ.க இறங்கியுள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. தேர்தல் நடைபெற உள்ள சூழலில் ராமர் கோவில் அறக்கட்டளை அமைக்கப்படுவது பற்றி அறிவிப்பு வெளியிடுவது சரியா என்று எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை அணுகி உள்ளதாக கூறப்படுகிறது.