ராமர் கோயில் கட்ட ரூ.5 லட்சம் நிதியளித்த இஸ்லாமிய அமைப்பு!

  0
  1
  அயோத்தி

  அசாமைச் சேர்ந்த 21 இஸ்லாமிய சமுதாயங்களை கொண்ட அமைப்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 5 லட்சம் நிதி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

  அசாமைச் சேர்ந்த 21 இஸ்லாமிய சமுதாயங்களை கொண்ட அமைப்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ. 5 லட்சம் நிதி வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

  அயோத்தி வழக்கில், ராமர் கோயில் கட்டலாம் என்றும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அயோத்தியிலேயே மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டது. 

   Ram Mandir

  இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக  அசாமைச் சேர்ந்த 21 இஸ்லாமிய சமுதாயங்களை கொண்ட அமைப்பு, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக அமைக்கப்படவுள்ள அமைப்புக்கு எங்கள் தரப்பிலிருந்த் ரூ. 5 லட்சம் நிதி வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.  ஜனநாயக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை மதிப்பதாக கூறியுள்ள இஸ்லாமிய அமைப்புகள், சமூக வலைதளங்கள் மூலம் பிரச்னையை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை பதிவிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.