ராமர் கோயில் கட்ட நிலத்தையும் கொடுப்போம்…..தங்க செங்கலையும் கொடுப்போம்……..அயோத்தி விவகாரத்தில் அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத திருப்பங்கள்

  0
  3
  யாகூப் ஹபீபுதீன் டூசி

  சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமையை உச்ச நீதிமன்றம் எங்களுக்கு கொடுத்தால் அதனை இந்துக்களிடம் கொடுத்து விடுவோம். மேலும் ராமர் கோயில் கட்ட தங்க செங்கல் கொடுப்போம் என பாபரின் வம்சாவளியான யாகூப் ஹபீபுதீன் டூசி தெரிவித்தார்.

  உச்ச நீதிமன்றத்தில் அயோத்தி நில உரிமை பிரச்னை தொடர்பாக வழக்கு விசாரணை நேற்றுடன் முடிவடைந்து விட்டது. விரைவில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அயோத்தி விவகாரத்தில் பல நேர்மறையான சம்பவங்கள் நிகழ தொடங்கியுள்ளன. யூ டியூப்பில், தி ராயல் முகலாய குடும்பம் சேனலில் முகலாய மன்னர் பாபரின் சந்ததியனரான யாகூப் ஹபீபுதீன் டூசி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  சர்ச்சைக்குரிய நிலம்

  அந்த வீடியோவில் யாகூப் ஹபீபுதீன் டூசி பேசியிருப்பதாவது: அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தாலும், அது 100 கோடி இந்துக்களின் நம்பிக்கைகளை மதிப்பதாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். நிலம் பாபருக்கு சொந்தமானது என நாங்கள் முன்பு நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தோம். பல 100 ஆண்டுகளுக்கு முன் மிர் பாக்கி செய்ததற்காக நாங்கள் இந்துக்களிடம் மன்னிப்பு கேட்டோம்.

  தங்க செங்கல்

  இந்துக்களின் நம்பிக்கையை மறுபரிசீலனை செய்வதிலும், பல தசாப்தங்களாக நீடித்த வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் எனக்கு மகிழ்ச்சி. நிலத்தின் உரிமை பாபரின் குடும்பத்துக்கு சொந்தமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், பாபருடைய சந்ததினரான நாங்கள் அந்த நிலத்தை கோயில் கட்டுமானத்துக்காக இந்துக்களிடம் ஒப்படைப்போம். மேலும் முன்பு கூறியது போல் முகலாய குடும்பத்தை சேர்ந்த நாங்கள் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட தங்கத்தால் ஆன முதல் செங்கல்லை கொடுப்போம். இவ்வாறு அதில் தெரிவித்து இருந்தார்.