ராமர் கோயில் அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்!

  0
  5
  ராமர் கோயில் அறக்கட்டளை

  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. மேலும், மூன்று மாதங்களில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட நிலம் வழங்க வேண்டும்,

  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளைக்கு நிர்வாகிகள் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

  உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்தது. மேலும், மூன்று மாதங்களில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட நிலம் வழங்க வேண்டும், ராமர் கோவில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை உருவாக்க முடிவு செய்துள்ளதாக அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில் மோடி அறிவித்திருந்தார். அதன்படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக, 15 பேர் கொண்ட அறக்கட்டளையை, மத்திய அரசு நிறுவியது. அதன் முதல்கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. அதில், அறக்கட்டளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  நிருபேந்திர மிஸ்ரா

  ராமர் கோயில் அறக்கட்டளையின் தலைவராக மஹந்த் நிருத்யா கோபால்தாஸ் என்பவரும் பொதுச் செயலாளராக சம்பத் ராய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் முன்னாள் முதன்மை செயலர் நிருபேந்திர மிஸ்ரா, கோவில் கட்டுமானக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவில் கட்டுமானத்திற்கு தேவையான நன்கொடையை பெற அயோத்தியிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் தனி கணக்கு ஒன்று விரைவில் தொடங்கப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.