ராமன் பெயரால் 1400 கோடி கொள்ளை..! குற்றம் சாட்ட்டும்  இந்து அமைப்புகள்!?

  0
  8
  ராமன்

  உத்திரப்பிரதேசத்தை தலைமை இடமாகக் கொண்டு பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும் அமைப்பு,நிர்மோகி அக்ஹாரா. இந்த அமைப்பு செல்வமும், செல்வாக்கும் மிக்கது. உத்திரப்பிரதேசம், பீஹார்,ராஜஸ்த்தான், மத்தியப்பிரதேசம்,குஜராத் முதலிய மாநிலங்களில் பல நூறு கோவில்களையும் மடங்களையும் இந்த அமைப்பு நிர்வகித்து வருகிறது.

  ramar temple

  ராமர்ஜென்ம பூமி தொடர்பாக 1956ல் இருந்தே சட்டப்போராட்டம் நடத்தி வரும் அமைப்பு இது.உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில்.இந்த அமைப்பினர் ஏமாற்றம் அடைந்துளனர்.அதைத் தொடர்ந்து இந்த அமைப்பைச் சேர்ந்த சீத்தாராம் என்பவர் வி.ஹெச்.பி மீதும்,பெயர் குறிப்பிடாமல் பிஜேபி மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

  பாபர்மஜ்ஜித் இடிக்கப்பட்டது முதலே வி.ஹெச்.பி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களிடமிருந்து ராமர் கோவில் கட்டுவதற்காக நிதி திரட்டி வந்திருக்கிறது என்றும்,அப்படி திரட்டிய நிதியைக் கொண்டு விஹெச்பி அமைப்பு தங்கள் அலுவலகங்களைத் தவிர வேறு எதையும் கட்டவில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்.

  vhp

  விஹெச்பி அமைப்பும் அது சார்ந்த அரசியல் கட்சியும் இந்த ராமர் கோவில் விவகாரத்தை தங்களுக்கான அரசியல் ஆதாயமாகத்தான் பயன்படுத்திக் கொண்டார்கள்.அவர்கள் கையில் கோவில் நிர்வாகம் செல்லக்கூடாது.
  மத்திய அரசு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி உடனடியாக ஒரு டிரஸ்ட்டை ஏற்படுத்த வேண்டும்,அதில் எல்லா அமைப்பைச் சேர்ந்தவர்களையும் உறுப்பினர் ஆக்க வேண்டும்.முக்கியமாக விஹெச்பி ராமன் கோவிலின் பெயரைச் சொல்லி திரட்டிய 1400 கோடி ரூபாய் பணத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் நிர்மோகி அக்ஹாரா அமைப்பு தெரிவித்து உள்ளது.

  இப்படி இந்து அமைப்புகள் தங்களுக்குள் மோதிக்கொள்வதை பிஜேபி தரப்பு கவலையுடன் கண்காணித்து வருகிறது.