ராமதாஸூம், அன்புமணியும் அரசியலை விட்டு விலக தயாரா? ஸ்டாலின் சவால்

  0
  5
  ஸ்டாலின்,அன்புமணி

  முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

  சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் , படம் அல்ல பாடம் என பாராட்டியிருந்தார்.‌இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி‌ அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம் என கூறியிருந்தார்.

  முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம் அல்ல என திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

  stalin

  சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தை பார்வையிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் , படம் அல்ல பாடம் என பாராட்டியிருந்தார்.‌இது குறித்து டிவிட்டரில் பதிவிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலி‌ அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என நம்புவோம் என கூறியிருந்தார். இதற்கு டிவிட்டரில் பதில் அளித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், முரசொலி அலுவலகம் இருக்கும் இடம் பஞ்சமி நிலமே அல்ல, வழி வழியாக தனியாருக்கு சொந்தமான பட்டாமனை என தெரிவித்துள்ளார். இதற்கான ஆவணத்தையும் அவர் தனது பதிவில் இணைத்துள்ளார். ராமதாஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டடை ராமதாஸ் நிரூபித்தால் நான் அரசியல் விட்டு விலக தயார். ராமதாஸ் சொல்வதை நிரூபிக்க நிரூபிக்க தவறி அது பொய் என்றால் ராமதாஸூம் அவரது மகன் அன்புமணியும் அரசியலை விட்டு விலகத் தயாரா என வினவியுள்ளார்.