ராஜ்கிரணின் மனசிலே 28 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இடம் பிடித்த மீனா…

  14
  ராஜ்கிரண் -மீனா

  ராஜ்கிரண் 1991-ல் நடித்து திரைக்கு வந்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது

  28 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சினிமாவின் அத்தனை ரெகார்டுகளையும் உடைத்த ‘ராசாவின் மனசிலே’பட நாயகன் ராஜ்கிரணும் நாயகி மீனாவும் மீண்டும் ஒன்று சேர்ந்து நடிக்கிறார்கள்.

  ராஜ்கிரண் 1991-ல் நடித்து திரைக்கு வந்த ‘என் ராசாவின் மனசிலே’ படம் வெற்றி பெற்று வசூல் சாதனை நிகழ்த்தியது. இதில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்து இருந்தார். படத்தில் இடம்பெற்ற ’பெண் மனசு ஆழமென்று’…’குயில்பாட்டு’…, ’பாரிஜாத பூவே’…, , சோல பசுங்கிளியே, போடா போடா புண்ணாக்கு போன்ற பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தன.

  rajkiran

  அதன்பிறகு ராஜ்கிரணுக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அடுத்தடுத்து எல்லாமே என்ராசாதான்,’அரண்மனைக்கிளி என்று சில்வர் ஜூப்ளி படங்கள் கொடுத்து தமிழ்சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆனார்.தொடர்ந்து கதாநாயகனாகவும், தவமாய் தவமிருந்து, சண்டக்கோழி, காவலன் உள்ளிட்ட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்தார். கடைசியாக அவர் நடிப்பில் சண்டக்கோழி-2 படம் கடந்த வருடம் திரைக்கு வந்தது.

  meena

  இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘ஷைலாக்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராஜ்கிரணை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் ராஜ்கிரண் ஜோடியாக மீனா நடிக்க உள்ளார்.என் ராசாவின் மனசிலே படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இந்த படத்தில் இணைகிறார்கள்.அஜய் வாசுதேவ் இயக்குகிறார். ஏற்கனவே மம்முட்டி நடித்த ராஜாதிராஜா, மாஸ்டர் பீஸ் ஆகிய மலையாள படங்களை இவர் டைரக்டு செய்துள்ளார். கேரளாவில் நடந்த படத்தின் தொடக்க விழா நிகழ்ச்சியில் ராஜ்கிரணும், மீனாவும் மம்முட்டியுடன் ஒரே மேடையில் தோன்றி ரசிகர்களின் கைதட்டலை பெற்றனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.