ராஜ்கமல் நிறுவனத்தின் 50ஆவது படம் குறித்து அறிவித்த கமல்!

  0
  3
  தர்ஷன்

  பிக் பாஸ் வெற்றியாளர் தர்ஷன் தான் என்று நினைத்திருந்த ரசிகர்கள் மத்தியில் தர்ஷனின்  வெளியேற்றம் இன்னும் கூட அவரது  ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிகழ்வாகவே உள்ளது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும் நண்பர்களுடன் சந்திப்பு, ஆட்டம் பாட்டம் என்று ஜாலியாக இருக்கிறார். 

  THARSHAN

  இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்வில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நெஷனல் தயாரிப்பில் ஒரு படத்தில் தர்ஷனை ஒப்பந்தம் செய்வதாக கமல் அறிவித்தார். 

  KAMAL

  இந்நிலையில் நேற்று ராஜ் கமல் அலுவலகத்தின் புதிய கட்டிடம் மற்றும் இயக்குநர் கே.பாலசந்தரின் சிலை திறப்பு விழாவில் பேசிய கமல், ‘ராஜ்கமலின் 50 வது படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளோம். அதில் நான் நடிக்கவேண்டும் என்பதில்லை. அந்த அளவிற்கு ராஜ்கமலை நீங்கள் வளர்த்திருக்கிறீர்கள்’ என்றார்.

  ஏற்கனவே ராஜ்கமலில் தர்ஷன் ஒப்பந்தமாகியுள்ள நிலையில் கமல் ராஜ்கமல் நிறுவனத்தின் 50 ஆவது படம் குறித்து பேசியிருப்பது தர்ஷன் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .