ராஜீவ் படுகொலை நியாயம்தான் ! சீமானின் சர்ச்சை பேச்சால் காங்கிரஸ் கொதிப்பு !

  0
  1
  seeman

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை சரியானது என காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்துள்ளார்.

  இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ்காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது.

  thirunavakkarasar

  சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் ராஜீவ்காந்தி படுகொலை என்பது உலகையே உலுக்கிய சம்பவம். அரசியல், இனம் எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்டு அனைத்து தரப்பும் மக்களும் வேதனை அடைந்தார்கள். இந்த படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கூட அதிர்ச்சி அடைந்த்து மட்டும் அல்லாமல் இதில் விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இல்லை என மறுப்பு  தெரிவித்திருந்தார்.

  ஆனால் தற்போது நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய கருத்தை விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் கூட ஏற்க மாட்டார்கள். சீமானின் பேச்சு காங்கிரசை மட்டும் அல்லாது கட்சியை தாண்டி அனைவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என திருநாவுக்கரசர் பேசினார்.

  இந்திய திருநாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் சீமான் பேசி இருப்பதாகவும், அவரின் வக்கிரமான பேச்சை யாரும் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து இருப்பது சரியான நடவடிக்கை என்றும் சீமான் தனது பேச்சை திரும்ப உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார் திருநாவுக்கரசர்.

  ksalagiri

  இதற்கிடையே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் ராஜீவ்காந்தி படுகொலையை நியாயப்படுத்தி பேசிய சீமானை தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

  இந்நிலையில் சின்னமலை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியினர் சீமானின் உருவ பொம்மையை எரித்ததால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

  protest