‘ராஜீவ் காந்தி குறித்து பேசியதால் என்ன கலவரம் நடந்து விட்டது? வழக்கை சட்டப்படி சந்திப்பேன்’ : சீமான் திட்டவட்டம்!

  0
  4
  சீமான்

  ராஜீவ் காந்தி குறித்து பேசியதைத் திரும்ப பெற மாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

  ராஜீவ் காந்தி குறித்து பேசியதைத் திரும்ப பெற மாட்டேன் என்று சீமான் தெரிவித்துள்ளார். 

  விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.  அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டது நியாயமானது என்பது போல சர்ச்சைக்குரிய வகையில்  பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

  seeman

  இந்த விவகாரம் தொடர்பாக  காங்கிரஸ் கட்சியினர் அளித்த புகாரின்பேரில்  விக்கிரவாண்டி காவல்நிலையத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் போன்ற இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. ராஜீவ்காந்தி  படுகொலையை நியாயப்படுத்தி, வன்முறையைத் தூண்டி, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய சீமானை தேசத்துரோக குற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் போராட்டமும் நடத்தப்பட்டது. 

  seeman

  இந்நிலையில் இதுகுறித்து பேசிய சீமான், ‘இதுபோல பல வழக்குகளை பார்த்து விட்டேன். என்னை உள்ளே தள்ளவும், ப. சிதம்பரத்தை வெளியில் கொண்டுவரவும் முயற்சி செய்கிறார்கள். நான் பேசியதால் என்ன கலவரம் நடந்து விட்டது. காங்கிரஸ் கட்சியினர் தான் கொந்தளிக்கிறார்கள். வழக்கை சட்டப்படி சந்திப்பேன். எதற்காகவும் போராடாத காங்கிரஸ் கட்சி போராடுவது சந்தோஷமாக உள்ளது. பிரபாகரனை முன்வைத்தே எங்கள் பரப்புரை இருக்கும். நான் பேசியதை திரும்ப பெற போவதில்லை’ என்றார்.