ராஜமவுலியின் “ஆர்.ஆர்.ஆர்” படத்தின் டிஜிட்டல் உரிமை இத்தனை கோடியா? மலைக்கவைக்கும் வியாபாரம்!?

  0
  4
  ஆர்.ஆர்.ஆர்

  மேலும் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். 

  ‘பாகுபலி’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடைபெறுகிறது. இந்தப் படத்தின் மூலம் மஹதீரா படத்துக்கு பிறகு ராம் சரண் – ராஜமவுலி ஆகியோர் இணைந்துள்ளனர். அதேபோல் முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.மேலும் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். 

  rrr

  படம் இந்தாண்டு ஜூலை 30 ஆம் தேதி, வெளியாக இருந்த நிலையில் தற்போது அக்டோபர் மாதத்திற்கு வெளியீடு தள்ளிப்போயுள்ளது. மேலும்  அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் தொடக்க விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துவங்கியது.இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென விலகினார். 

   

  ஆர்.ஆர்.ஆர்

  இந்நிலையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமை மட்டும் 215 கோடிக்கு விலைபோயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நிறுவனம் அனைத்து மொழி உரிமையையும்  சேர்த்து இந்த தொகைக்கு வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.