ராக்கெட் வேகத்தில் உயரும் வெங்காயம் விலை! நாங்க ஒன்னும் சும்மா இருக்கல! பொங்கிய நிர்மலா சீதாராமன்

  16
  வெங்காயம்

  வெங்காய விலை உயர்வை தடுக்க ஏற்றுமதிக்கு தடை, கையிருப்பு வைக்க உச்ச வரம்பு உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மத்திய அரசு எடுத்து வருகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

  கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்காயம் உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதிகளில் பெய்த எதிர்பாராத மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தன. இதனால் உற்பத்தி பாதித்தது மற்றும் சப்ளையில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் உள்நாட்டில் வெங்காயத்தின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு வருகிறது. தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது. இதனால் நடுத்தரவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

  நிர்மலா சீதாராமன்

  வெங்காய விலை உயர்வை தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று துணை மானிய கோரிக்கைகளின் முதல் பகுதி விவாதம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்கையில் கூறியதாவது: தட்டுப்பாடு காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது.

  வெங்காய மண்டி

  வெங்காய விலை உயர்வை தடுக்க வெங்காய ஏற்றுமதிக்கு தடை, வர்த்தகர்கள் கையிருப்பு வைப்பதற்கு உச்ச வரம்பு நிர்ணயம் விதிப்பு, இறக்குமதி மற்றும் உபரியாக உள்ள பகுதியிலிருந்து பற்றாக்குறையாக உள்ள பகுதிக்கு வெங்காயத்தை அனுப்புவது உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், வெங்காயத்தை கையிருப்பு வைப்பதில் சில அடிப்படை பிரச்னைகள் உள்ளன. அவற்றுக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. மேலும் நேரடி மானிய திட்டத்தை அமல்படுத்தியதால் கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசுக்கு ரூ.1.41 லட்சம் கோடி மிச்சமாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.