ராகுல் காந்தி ராஜினாமா: என்ன சொல்கிறார் பிரியங்கா

  0
  1
  பிரியங்கா காந்தி

  ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

  ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து அவரது சகோதரி பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். 

  மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததையடுத்து ராகுல்காந்தி  தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால்  அவருடைய ராஜினாமா கடிதம் இன்னும் காரியக்கமிட்டியால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும்  காங்கிரஸ் மூத்த தலைவர் பலரும் ராகுல்காந்தியின் ராஜினாமா செய்யக் கூடாது என்று வலியுறுத்தினர்.

  rahul

  இதையடுத்து நேற்று நாடாளுமன்ற வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, ‘தான் காங்கிரஸ் கட்சியின் தலைவர் இல்லை. ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துவிட்டேன். காங்கிரஸ் கட்சிக்கான புதிய தலைவரைத் தேர்வு செய்யுங்கள். புதிய தலைவரைத் தேர்வு செய்வதற்கான கூட்டத்தை உடனே கூட்டுங்கள்’ என்று வெளிப்படையாக அறிவித்தார். ராகுலின் இந்த அறிவிப்பால் புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. 

  பிரியங்கா காந்தி

  இந்நிலையில் இது தொடர்பாக பிரியங்கா காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில்,’ சிலருக்கு மட்டுமே இதுபோன்ற தைரியம் வரும். ராகுலின் முடிவை நான் மரியாதையுடன் ஏற்றுக்கொள்கிறேன் ‘ எனப் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தியின் ராஜினாமா காங்கிரஸ் கட்சி நடத்தும் புதிய நாடகம் என்று பாஜகவின் மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.