ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தால் நீங்க மோடிக்கு நன்மை செய்த போன்றது…. கேரள மக்களை எச்சரித்த பிரபல வரலாற்றாசிரியர்….

  17
  ராமசந்திரா குஹா

  2024ல் ராகுல் காந்தியை மீண்டும் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுத்தால் நீ்ங்க மோடிக்கு சும்மா நன்மை செய்வது போன்றது என கேரள மக்களை எச்சரித்துள்ளார் வரலாற்றாசிரியர் ராமசந்திரா குஹா.

  கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பிரபல வரலாற்றாசிரியர் ராமசந்திர குஹா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் பெரிய கட்சி என்ற நிலையிலிருந்து பரிதாபமான குடும்ப நிறுவனமாக மாறியதற்கு, இந்தியாவில் இந்துத்துவா மற்றும் தேசபக்தி அதிகரித்து வருவதும் ஒரு காரணம்.

  காங்கிரஸ்

  கேரள மக்களே, இந்தியாவுக்காக நீங்கள் அதிகளவில் ஆச்சரியமான விஷயங்களை செய்து உள்ளீர்கள். ஆனால் நாடாளுமன்றத்துக்கு ராகுல் காந்தியை தேர்ந்தெடுத்து மிகப்பெரிய பேரழிவு செயலை செய்து விட்டீர்கள். ராகுல் காந்திக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தவித பிரச்சனையும் கிடையாது. அவர் ஒழுக்கமான மற்றும் நல்ல நடத்தை உள்ள மனிதர். ஆனால் ஐந்தாம் தலைமுறை வம்சமான ராகுல் காந்தியை இளம் இந்தியா விரும்பவில்லை. மலையாள மக்களே 2024ல் மீண்டும் ராகுல் காந்தியை மீண்டும் தேர்ந்தெடுக்கும் தவறை செய்தால், நீங்கள் நரேந்திர மோடிக்கு நன்மைக்கு செய்வது போன்றதாகும்.

  ராகுல் காந்தி

  நரேந்திர மோடிக்கு பெரிய சாதகமான அல்லது நன்மையான விஷயம் என்னவென்றால் அவர் ராகுல் காந்தி இல்லை என்பதுதான். அவர் சுயமாக வளர்ந்தார். அவர் மாநிலத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவரிடம் நிர்வாக அனுபவம் உள்ளது. அவரது நம்பமுடியாத கடின உழைப்பு மற்றும் ஐரோப்பாவில் விடுமுறையை கழிப்பதில்லை. என்னை நம்புங்கள் நான் சொல்லும் அனைத்தும் விஷயங்களும் தீவிரமானது.

  மோடி

  ஆனால் ராகுல் காந்தி அதிக புத்திசாலி, அதிக கடின உழைப்பாளி மற்றும் ஐரோப்பாவில் விடுமுறையை கழிக்கமாட்டார் என்று வைத்து கொண்டாலும், ஐந்தாம் தலைமுறை வம்சமான அவர், சுயமாக உருவாகிய நபருக்கு எதிராக இன்னும் பாதகமாக இருப்பார். ராகுல் நாடாளுமன்றத்தில் இருப்பதால்தான், நேரு காஷ்மீரில் விஷயத்தில் இதை செய்தார், சீனாவில் செய்தார் என ஒவ்வொரு முறையும் மோடி பேசுகிறார். அவர் இல்லையென்றால், மோடி தனது கொள்கைகள் மற்றும் அது ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்து பேசுவார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.