ராகுல் இனி மூச்ச் விடக்கூடாது… அமீத் ஷாவின் அதிரடி ஆபரேஷன்… ப.சி.கைதால் கதிகலங்கும் காங்கிரஸ்..!

  0
  2
  மோடி

  ப.சிதம்பரத்தைச் சிறைக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்து, காங்கிரஸ் கட்சியை ஆட்டம்காண வைக்க ஆபரேஷன் ஸ்டார்ட் என்கிறார்கள்.

  காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த இடியை கொடுக்கத் தயாராகிவிட்டது பாஜக தலைமையிலான மத்திய அரசு. மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் நபராக இருந்த ப.சிதம்பரத்தைச் சிறைக்குள் அனுப்ப நடவடிக்கை எடுத்து, காங்கிரஸ் கட்சியை ஆட்டம்காண வைக்க ஆபரேஷன் ஸ்டார்ட் என்கிறார்கள்.PC

  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெற்ற 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தார். அப்போது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு, அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியது. இதற்கு ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்தின் உதவியுடன் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதைத் தொடர்ந்து, சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

  இந்த வழக்கில் கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் சிதம்பரமும் இடம்பெற்றிருப்பதால் அவரும் கைதுசெய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது. இதே போல், ஏர்செல் – மேக்சிஸ் நிறுவனங்களுக்கு இடையிலான 3,500 கோடி ரூபாய் ஒப்பந்த முறைகேடு தொடர்பான வழக்கிலும் சிதம்பரத்துக்குச் சிக்கல் ஏற்பட்டது. இந்த இரண்டு வழக்கிலும் தன்னைக் கைதுசெய்துவிடக் கூடாது என்று டெல்லி நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்தார் சிதம்பரம். ஒவ்வொரு முறையும் இந்த வழக்கில் கைது செய்வதற்கான தடையை நீட்டித்துக்கொண்டே வந்தார்.PC

  ‘சிதம்பரத்தைக் காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே இந்த வழக்கில் எங்களால் விசாரணையை முடிக்க முடியும்’ என்று தொடர்ந்து அமலாக்கப் பிரிவும் சி.பி.ஐ-யும் சொல்லிவருகிறது. எனவே, இந்த முறை வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்பதில் இரண்டு அமைப்புகளும் உறுதியாக உள்ளன. அதேநேரம், இதற்குப் பின்னால் உள்ள அரசியலையும் டெல்லி காங்கிரஸ் தலைமை உன்னிப்பாக கவனித்துவருகிறது.

  மோடி பிரதமராக மீண்டும் பொறுப்பேற்ற பிறகு, அவருடைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மசோதாக்கள் மற்றும் பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துவந்தார் சிதம்பரம். குறிப்பாக, நாட்டின் பொருளாதார நிலை படுமோசமாக இருப்பதை பல்வேறு ஆதாரங்களுடன் தொடர்ந்து ஊடகங்களில் சிதம்பரம் பேசிவந்தார். இது மத்திய அரசுக்கு உறுத்தலை ஏற்படுத்தியது. பெரும் தலைவலியாக இருந்தது. இதனால், சிதம்பரத்துக்குச் செக் வைக்கும் வேலையில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.

  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அவரது கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.ஐ மூலம் இந்த வேலைகள் சத்தமில்லாமல் நடந்துவந்தன. ஏற்கெனவே உள்துறை அமைச்சராக இருந்தவர் சிதம்பரம். அவருக்கு நெருக்கமான அதிகாரிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பே சிதம்பரத்திடம் “உங்களைக் கைதுசெய்யும் வேலைகள் தீவிரமாக நடக்கிறது. உங்கள் மகனுக்கும் சிக்கல் உள்ளது” என்று எச்சரிக்கை சிக்னல் கொடுத்தனர்.PC

  அதற்குப் பின்தான் பிரதமர் மோடியின் சுதந்திர தின பேச்சுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தாராம் சிதம்பரம். இது காங்கிரஸ் கட்சிக்குள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், சிதம்பரம் காரணமில்லாமல் எதையும் செய்ய மாட்டார் என்று கட்சியும் அமைதியாக இருந்தது. காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர் பதவிக்கே திண்டாட்டத்தில் இருந்துவரும் நிலையில், சிதம்பரம் போன்றோரை முடக்கிவைக்கும் மத்திய அரசின் திட்டத்தைக் கண்டு காங்கிரஸ் கட்சித் தலைமையும் அச்சத்தில் உள்ளது. 

  சிதம்பரத்தைச் சிறைக்குள் அனுப்பி காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துவிட்டது, மத்திய பாஜக அரசு.