ரவுடி வரிச்சியுர் செல்வத்திற்கு விவிஐபி பாஸ் தந்து அத்திவரதரை அசிங்கப்படுத்திட்டீங்களேடா‍!

  0
  12
  Varichiyur Selvam

  நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அத்திவரதர் தரிசனத்திற்காக காத்திருப்பதால், காஞ்சிபுரம் ஒரு மினி திருப்பதியாக காட்சியளிக்கிறது.

  நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து எழுந்து அருள் பாலிக்கும் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க, குடியரசுத்தலைவர், பிரதமர் என பெருந்தலைகள் எல்லாம் வரிசைகட்டி வருவதில் ஆச்சர்யமென்ன? நாளொன்றுக்கு ஒன்றரை லட்சம் பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து அத்திவரதர் தரிசனத்திற்காக காத்திருப்பதால், காஞ்சிபுரம் ஒரு மினி திருப்பதியாக காட்சியளிக்கிறது. மணிக்கணக்கில் காத்திருந்தும் வரிசையில் முன்னேற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிப் போகையில், விவிஐபிகள் ஸ்பெஷல் பாஸ் பெற்று அருகில் இருந்து தரிசனம் பெற்றுவருகின்றனர். பிரச்னை இப்ப என்னன்னா, யார் யாரெல்லாம் விவிஐபிகள் என்பதே?

  President offering prayers

  குடியரசுத்தலைவருக்கு கிடைத்த விவிஐபி தரிசனம், பிரபல ரவுடியான வரிச்சியூர் செல்வத்திற்கும் கிடைத்திருக்கிறது. அத்திவரதர் சிலைக்கு வெகு அருகில் வரிச்சியூ செல்வம் அவனுடைய அடியாட்களுடன் பக்தி பரவசத்தோடு(?!) அமர்ந்து தரிசனம் பெற்ற வீடியோ வெளியாகியுள்ளது.

  Varichiyur Selvam

  மதுரையைச் சேர்ந்த செல்வம் மீது தமிழகத்தின் பல்வேறு காவல்நிலையங்களில் கொலை முயற்சி, ஆட்கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கூடவே, சரித்திர பதிவேட்டுக் குற்றவாளியாக பதிவு செய்யப்பட்ட பெருமையும் பெற்றவர் வரிச்சியூர் செல்வம். இந்த செல்வத்திற்குத்தான் அத்திவரதர் சன்னதியில் வெகு அருகில் அமர்ந்து தரிசனம் செய்யும் விவிஐபி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. கடைசியில அத்திவரதரை அசிங்கப்படுத்திட்டீங்களேடா!