ரவுடி பேபி பாடலுக்கு செம மாஸ்ஸாக நடனமாடிய பள்ளி குழந்தைகள்! வைரல் வீடியோ 

  0
  8
  தனுஷ் - சாய் பல்லவி

  ரவுடி பேபி பாடலுக்குப் பள்ளி குழந்தைகள் நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

  சென்னை: ரவுடி பேபி பாடலுக்குப் பள்ளி குழந்தைகள் நடனமாடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

  நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். இவருடன் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில், இடம் பெற்ற ரவுடி பேபி பாடலை  தனுஷ் எழுதி பாடியுள்ளார். மேலும் இதற்கு இயக்குநரும், நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். 

  இந்த நிலையில் இந்த பாடல் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவர்கள் அனைவரும் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர். மிகவும் உற்சாகமாகப் பாடிக்கொண்டே நடனமாடியுள்ள அந்த பள்ளி மாணவர்களின் வீடியோ வைரலாகி வருகிறது. 

  முன்னதாக இந்த பாடல் யூடியூபில் 600மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.