ரவுடி பிக்சர்ஸ்: காதலர் தயாரிப்பில் நடிக்கும் நயன்தாரா 

  0
  3
  நயன்தாரா- விக்னேஷ் சிவன்

  தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.

  தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் சமீப காலமாகவே கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது பிகில், தர்பார் போன்ற டாப் ஹீரோ படங்களில் நடித்து வருகிறார். 

  இவ்வரிசையில் அடுத்ததாக மிலிந்த் ராவ் இயக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை இயக்குநரும், நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கவுள்ளார். இவர், தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ’ரவுடி பிக்சர்ஸ்’ என்று பெயர் வைத்துள்ளார். 

  nayanthara

  அவர் இயக்கிய ’நானும் ரவுடி தான்’ படம் ஹிட்டானதால் இந்தப் பெயரை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் மூலம் அவர் தயாரிக்கும் முதல் படத்தை அறிமுக இயக்குநர் இயக்குகிறார். நயன்தாரா ஹீரோயின்னாக நடிக்க மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.