ரவா கட்லெட் எப்படி செய்வது?

  0
  3
  ரவா கட்லெட்

  மாலை நேரத்தில் பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு எப்போது பஜ்ஜி,போண்டா செய்து கொடுத்து அலுத்துவிட்டதா? அப்படியென்றால் இன்று சற்று வித்தியாசமாக ரவா  கட்லெட் செஞ்சி கொடுங்கள். அதை டி, காப்பி குடிக்கும் போது சாப்பிட்டால் இன்னும் ஏற்றவாறு இருக்கும்.

  rava cutlet

  தேவையான பொருட்கள்: 

  ரவை- 200 கிராம் 
  பசும் பால் – 1 1/2 டம்ளர்
  தண்ணீர்- 1 1/2 டம்ளர்
  கேரட்- 1
  பச்சை மிளகாய் – 1
  பட்டை, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் 
  கொத்தமல்லி – 1 கப் 
  மைதா மாவு – 4 டீஸ்பூன் 

  பிரட் தூள், எண்ணெய், உப்பு

  rava

  செய்முறை: 

  முதலில் வாணலியை அடுப்பில் வைத்து சூடேரி அதில் தண்ணீரும், பாலும் ஒன்றாக கலந்து கொதிக்க வைத்து, ரவையை சேர்த்து வேகவைக்கவும். பின்பு துருவிய கேரட், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி,மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மாவை கலந்து விருப்பம் போல் வடிவு செய்து கொள்ளவும். இதை பிரட் பவுடரில் தேய்த்து, மைதாமாவில் முக்கி எடுத்து எண்ணெய்யில் போட்டு வெந்தபின் எடுக்கவும்.  

  இதையும் படிங்க: அட்லீ நிறம்: கிண்டல் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விஜய் ரசிகர்கள்!