ரயில் தண்டவாளத்தில் உறங்கிய போதை ஆசாமி! 3 ரயில்கள் கடந்த சென்ற பிறகும் யமனிடமிருந்து எஸ்கேப்

  0
  1
  அசோக் நகர் ரயில் நிலையம்

  மத்திய பிரதேசத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்து உறங்கிய போதை ஆசாமி மீது 3 ரயில்கள் கடந்த சென்ற பிறகும் அவர் உயிரோடு இருந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  மத்திய பிரதேசம் அசோக் நகர் ரயில் நிலையம் அருகே ஒரு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயிலின் டிரைவர் தண்டவாளத்தில் ஒரு உடல் கிடப்பதை பார்த்துள்ளார். உடனே அசோக் ரயில் நிலையத்துக்கு இது குறித்து  தகவல் கொடுத்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு ரயில்வே போலீசார் விரைந்து வந்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதற்கு முன் அந்த தண்டவாளத்தில் ஏற்கனவே 3 ரயில்கள் கடந்து சென்று விட்டன.

  ரயில் தண்டவாளத்தில் உறங்கிய போதை ஆசாமி (மாதிரி படம்)

  இறந்த உடலைதான் எடுத்து செல்வோம் என்ற நினைப்பில் வந்த போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தண்டவாளத்தில் கிடந்த நபர் திடீரென சுயநினைவுக்கு வந்து பேசிய கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அந்த போதை ஆசாமியை மருத்துவ பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

  ரயில்

  இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், நாங்கள் இறந்த உடலைதான் மீட்கபோகிறோம் என்ற நினைப்பில் சம்பவ இடத்துக்கு சென்றோம். ஆனால் அங்கு சென்ற போது அந்த நபர் சுயநினைவுக்கு வந்து பேசியது அதிர்ச்சியாக இருந்தது. மயக்கநிலையில் இருந்தார் மற்றும் ரயில் தண்டவாளத்தில் படுத்து இருக்கிறோம் என்பதை கூட அவருக்கு தெரியவில்லை. அவரது பெயர் தர்மேந்திரா என்பது தெரியவந்தது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என தெரிவித்தார்.