ரயில்வே தண்டவாளத்தில் நடப்பவர்களை தூக்கிச்செல்லும் எமதர்ம ராஜா!

  0
  1
  yamraj

  மும்பையில் ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து புதுவிதமான முறையில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.  

  ஓடும் ரயில் ஏறும்போதோ அல்லது நடை பாதை மேம்பாலங்களை பயன்படுத்தாமல் ரயில்வே தண்டவாளங்களை பயன்படுத்துவதால்  அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எத்தனையோ முறை அறிவுறுத்தியும், பல அறிவிப்பு பலகைகள் வைத்து பொதுமக்கள் இந்த தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர்.

   'Yamraj'

  இந்நிலையில் ரயில் தண்டவாளங்களை கடக்கும்போது ஏற்படும் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த எமதர்ம ராஜா போன்று வேடமணிந்த ஒருவர், தண்டவாளத்தை கடக்கும் நபர்களை தடுத்து அவர்களை தூக்கிச்சென்று அறிவுறுத்துகிறார். இந்த முறை விழிப்புணர்வு அங்கிருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது