ரஜினி மட்டும் அதை நிரூபிச்சிட்டா மொட்டை அடிச்சுக்குறேன் – மன்சூர் ஆவேசம்!

  0
  1
  Monsoorr

  துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதி இருந்தார் என்று எப்படி சொன்னார் என்று இன்றளவிலும் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் இஷ்டத்துக்கு அவர் சொல்லிவிட்டார், அதை இன்று அல்லது என்றைக்கு இருந்தாலும், அவர் நிரூபித்துத்தான் ஆகவேண்டும். அவர் மட்டும் நிரூபித்துவிட்டால், என் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன்.

  திங்கட்கிழமை காலை அலுவலகம் வந்து உட்கார்ந்தவுடனேயே, தட்சணையில் பாதி பாக்கிவைத்துவிட்ட மாமனாரை பார்க்கும் கோவம் வரும் அலுவலக சீனியரை பார்க்கும்போது. அதுவும் வெள்ளிக்கிழமையும் விடுமுறை என்றுவரும்போது எவ்வளவு வெறுப்பு வரும்? அந்த வெறுப்பையெல்லாம் தூக்கி கடாசும் அளவுக்கு லட்டு மாதிரி ஒரு நியூஸ் படிச்சா எப்புடி இருக்கும்? அதுவும் நம்ம கண்டெண்ட் மன்னன் மன்சூரலிகானே அந்த கண்டெண்ட்டை அளித்தால்? வழக்கமாக அரசியல் அமைப்பு, கட்சி என பொத்தாம்பொதுவாக வாங்குவாங்கென வாங்கும் மன்சூர், இந்தமுறை கொஞ்சம் மேலேறிவந்து பாஜகவின் கொபசெவை நேரடியாக கேட்டிருக்கிறார். பாஜகவுக்கு ஏகப்பட்ட கோபசெ இருக்குறாங்க, மன்சூர் யாரைச் சொல்கிறார் என்று இன்னமும் துல்லியமாக கேட்டால், நம்ம ரஜினியைத்தான்!

  Monsoor and Rajini

  “என்றைக்கும் நான் ரஜினி ரசிகன்தான், ஆனால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிறகு அவரு ஒரு கண்டுபிடிப்பாக ஒரு காரணத்தைச் சொன்னாரே…அதை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை. துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாதி இருந்தார் என்று எப்படி சொன்னார் என்று இன்றளவிலும் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் இஷ்டத்துக்கு அவர் சொல்லிவிட்டார், அதை இன்று அல்லது என்றைக்கு இருந்தாலும், அவர் நிரூபித்துத்தான் ஆகவேண்டும். அவர் மட்டும் நிரூபித்துவிட்டால், என் தலையை மொட்டை அடித்துக்கொள்வேன்” இதுதான் மன்சூர் அலிகான் பேட்டியின் சாராம்சம். நல்லா ஜிவ்வ்வ்வ்வ்ன்னு இருந்துச்சா? இந்த பேட்டியை அப்டியே மனசுல வச்சுகிட்டு வேலையை ஆரம்பிங்க பாப்போம்!