ரஜினி பொய்க்கு பயந்து வாழும் ஒரு கோழை… திமுகவிடம் எடுபடுமா..?

  0
  17
  ரஜினிகாந்த்

  இவர்களை பற்றி சொன்னால், சொன்னவன் உயிருக்கு எதிர்காலம் இல்லாமல் செய்யும் நல்ல உள்ளங்கள் திமுக.

  ரஜினி பாவம், உண்மையை பேசி, பொய்க்கு பயந்து வாழும் ஒரு கோழை என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவர் திமுக மீது ஆத்திரம் அடைந்துள்ளார். தமிழ அரசியலில் ஆளுமை வெற்றிடம் நிரப்பப்படவில்லை என ரஜினி பேசியதற்கு திமுக ஆதரவு கட்சிகள் கொதித்து வருகின்றன. 

  \Stalin

  இது குறித்து ரஜினி மக்கள் மன்ற முக்கிய நிர்வாகி ஒருவர், ‘ஒரு குடிமகனாக தன் கருத்தை சொல்ல எல்லோருக்கும் இருக்கும் உரிமை ரஜினிக்கும் உண்டு. அவர் ஒன்றும் தானே தலைவர் என கழிவு நீர் வாய்க்கால்களை போல சொல்லிக் கொள்ளவில்லை. பிறகு ஏன் திமுக ஆதரவாளர்கள் அவர் மேல் விழுந்து புரள்கிறார்கள் என கொஞ்சம் யோசிக்க வேண்டியிருக்கிறது. 

  காரணம், இதுவும் திமுகவின் ரத்த சம்பந்தப்பட்டது. எந்தப் புதியவர், நல்லவர், வல்லவர், மனிதர், யோக்கியர் வந்தாலும் திமுக உடனே அவர் மேல் தனது சில்லறை எடுப்புகள் மூலம் எதிர்மறை கருத்தை விதைக்கும். இதுவே வரலாறு. இவர்களை பற்றி சொன்னால், சொன்னவன் உயிருக்கு எதிர்காலம் இல்லாமல் செய்யும் நல்ல உள்ளங்கள் திமுக.

  Rajini

   ஒரு படம் ஓடவில்லை என்றால் யாராவது எந்த மாறனிடமாவது இழப்பீடு கோர முடியுமா? தன் மேல் விழுந்த நில ஆக்கிரமிப்பு வழக்குகளை திமுக தலைமை எப்படி இல்லாமல் ஆக்கியது என்பது ஊரறிந்த உண்மை. இப்படி திமுகவின் வரலாறு அதிகம். உபிகளுக்கு 200 ரூபாய் கொடுத்து பிழைப்பு நடத்துகிறது திமுக. 

  பாவம் விஜயகாந்த். உண்மையிலேயே நல்ல மனிதர்.  இந்த மீடியாக்களை வைத்து வேர் வரை சுடு தண்ணீர் ஊற்றப்பட்டது. இப்போது கருப்பு பலூன், மோடி ஒழிக, ரஜினி ஒழிக என கோஷங்களை கிளப்பி தூண்டுகிறது.  ரஜினிக்கு மார்க்கெட் இல்லை  என்றால் உங்கள் சொந்தமான சன் பிக்சர்ஸ் கோடிகளை போட்டு படம் ஏன் படம் எடுக்கிறார்கள்.

  Rajini

  ரஜினி மீது உங்களுக்கு பயம். பயங்கர பயம். ஆனால், அது வெறும் பயமல்ல. நிஜமும் கூட. ரஜினி பாவம், உண்மையை பேசி, பொய்க்கு பயந்து வாழும் ஒரு கோழை. திமுக எதற்கும் அஞ்சாத வீரம். திமுக பகுத்தறிவுவாதிகளே.. பெரியாருக்கு மாலை போட்டு கும்பிட்டுவிட்டு பிள்ளையார் சிலையை கல்லென்று சொல்வது மட்டுமின்றி… நல்லவர்கள் பயப்படுகிற நிலையில்தான் தமிழக அரசியல் இருக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.