ரஜினி பற்றற்றவராக இருக்கிறார்… அ.தி.மு.க, தி.மு.க-வை மூட்டை கட்டிவிட்டால் தமிழகம் வளரும்! – தமிழருவி மணியன் சொல்கிறார்

  0
  1
  தமிழருவி மணியன்

  விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன, ஏமாற்றம் என்ன என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்றுப் பேசினார்.

  தி.மு.க, அ.திமு.க-வை மூட்டைகட்டிவிட்டால் தமிழகம் தானாக வளரும் என்ற காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
  விழுப்புரத்தில் காந்திய மக்கள் இயக்கம் மற்றும் ரௌத்திரம் இலக்கிய வட்டம் சார்பில் ரஜினியின் எதிர்பார்ப்பு என்ன, ஏமாற்றம் என்ன என்ற தலைப்பில் கூட்டம் நடந்தது. இதில், காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

  tamilaruvi

  “காந்தி காலத்தில் ஒருவன் அரசியலுக்கு வர வேண்டும் என்றால் தன்னிடம் இருப்பதை எல்லாம் இழக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அந்த உன்னத நிலை மீண்டும் ஏற்பட ரஜினியின் பின்னால் தமிழகம் வர வேண்டும். காந்தி காலத்துக்குப் பிறகு கொஞ்சம் பணத்தைப் போட்டுவிட்டு நிறையப் பணத்தை எடுக்கும் இடமாக அரசியல் மாறிவிட்டது. 
  ரஜினிகாந்த் தன்னுடைய மார்க்கெட்டை இழந்துவிடவில்லை. இன்றைக்கும் ரூ.300 கோடிக்கு மேல் வியாபாரம் நடக்கிறது. 70 வயதிலும் அவர் நடிக்க வேண்டும் என்று பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் போயஸ் கார்டனில் அணிவகுத்து நிற்கிறார்கள். அவருக்கு கோடி கோடியாக கொடுக்க தயாராக உள்ளனர். ஆனால் அனைத்தையும் புறக்கணித்துவிட்டு அரசியலை தூய்மைப்படுத்த அவர் வந்திருக்கிறார்.

  rajini

  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஒவ்வொருவரும் விசித்திர பேர்வழிகள்… தி.மு.க ஐந்து முறை ஆட்சிக்கு வந்துள்ளது. அப்போது எல்லாம் செய்யாததையா இப்போது செய்துவிடப் போகிறது. கருணாநிதியால் செய்ய முடியாததையா ஸ்டாலின் செய்துவிடப் போகிறார். நம்மைவிட குறைவாகச் சேர்த்து வைத்தவன் மலைபோல் குவித்துவிட்டானே, எப்படி குவிப்பது என நாமல்லவா உலகத்துக்கு சொல்லிக் கொடுத்தோம் என தி.மு.க எண்ணுகிறது. அ.தி.மு.க, தி.மு.க இரண்டையும் மூட்டைக் கட்டிவிட்டு ஒன்றை வங்கக்கடலிலும், மற்றொன்றை அரபிக் கடலிலும் வைத்துவிட்டால் தமிழகம் தானாக வளரும். ரஜினிகாந்த் பற்றற்ற ஒரு துறவியாக தன்னை பாவிக்கக் கூடிய மனிதர். அவரின் தொண்டர்கள் அதனை நினைத்து பெருமைப்பட வேண்டும்” என்று பேசினார்.