ரஜினி சொன்ன அதிசயம் உண்மைதான்! நானும் ரஜினியும் இணைந்து பயணிப்போம் – கமல்ஹாசன் அதிரடி

  0
  2
  Rajini and Kamal

  நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என நடிகரும், மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

  நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என நடிகரும், மக்கள் நீதிமய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

  கமல் ஹாசனுக்கு ஒடிசா மாநிலத்தின் செஞ்சுரியன் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. பட்டத்தை அம்மாநில முதல்வர் நவின் பட்நாயக் இன்று வழங்கினார். ஒடிசா சென்றுவிட்டு மீண்டும் சென்னை திரும்பியுள்ள கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 

  rajinikanth vs kamal

  அப்போது பேசிய அவர், “இந்தியாவிலேயே முதன்மையான திறன் மேம்பாட்டு துறையில் எனக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளனர். ஒடிசா முதல்வர் கையால் பெறுவது மகிழ்ச்சியை தருகிறது. நானும், ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம். தமிழகத்தின்  மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் பயணிப்போம். நாங்கள் இணைவது அதிசயம் ஒன்றும் இல்லை 44 வருடங்களாக இணைந்து தான் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ரஜினிகாந்த் முதல்வர் எடப்பாடியை விமர்சித்தது விமர்சனம் அல்லது நிதர்சனம்” எனக்கூறினார்.