ரஜினி – கமல் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமையவுள்ள தர்பார் தீம் மியூசிக்! எப்படி தெரியுமா?

  0
  2
  தர்பார்

  ரஜினிகாந்த்  காவலராக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கியது

  தர்பார் படத்தின் இசை குறித்து  அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ட்வீட் செய்துள்ளார். 

  இயக்குநர்  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக  நயன்தாரா நடித்து வருகின்றனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரஜினிகாந்த்  காவலராக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கியது. தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கடந்த வாரம் ரஜினிகாந்த் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார். தற்போது ரஜினி ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளார்.

  darbar

  ஏற்கனவே தர்பார் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. 

   

  இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  வரும் நவம்பர் 7 ஆம் தேதி தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரும், தீம் மியூசிக்கும் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.  நவம்பர் 7 ஆம் தேதி நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான  கமல் ஹாசனின் பிறந்தநாள். இந்த வரும் நவம்பர் 7 ரஜினி மற்றும் கமல் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்பார் திரைப்படம் வரும்  பொங்கலன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது   குறிப்பிடத்தக்கது.