ரஜினி- கமலை இணைத்தது யார்..? முடிந்தது முதல்வர் வேட்பாளர் டீலிங்..!

  0
  2
  rajinikanth kamala hassan

  மூத்த அதிமுக புள்ளிகள் ரஜினியைச் சந்தித்து அதிமுகவுக்கு ஒரு புதிய தலைமையை ஏற்கும்படி பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள்.

  தேவைப்பட்டால் இணைந்து செயல்படுவோம் என நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் தனித்தனியாகப் பேட்டியளித்துள்ளனர்.

  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ரஜினிகாந்த்தை அதிமுகவுக்குக் கொண்டுவர தீவிரமான சில முயற்சிகள் நடந்தன. ஐசரி கணேஷ், சைதை துரைசாமி, செங்கோட்டையன், தம்பிதுரை போன்ற மூத்த அதிமுக புள்ளிகள் ரஜினியைச் சந்தித்து அதிமுகவுக்கு ஒரு புதிய தலைமையை ஏற்கும்படி பேச்சுவார்த்தையில் இறங்கினார்கள். எடப்பாடி பழனிசாமி மெல்ல மெல்ல அதிமுகவில் தலையெடுக்கலாம் என்ற சூழலில் இந்தக் காய்கள் அப்போது நகர்த்தப்பட்டன. ஆனால் ரஜினி இதில் பிடிகொடுக்காமல் நழுவி விட்டார்.

  Rajinikanth

  இப்போது ரஜினியையும் கமலையும் அரசியல் ரீதியாக இணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் ஐசரி கணேஷ். இருவருக்கும் மிக நெருக்கமான ஐசரி கணேஷ் அரசியல் தளத்தில் ரஜினியும் கமலும் சேர்ந்தால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்றும், வலதுசாரி இடதுசாரி என்ற பேதம் எதுவும் இல்லாமல் அனைத்து மக்களும் ரஜினி – கமல் கூட்டணியை நோக்கி வருவார்கள் என்றும் இருவரிடமும் பேசி வந்தார்.

  Rajihassan

  ரஜினி – கமல் இணைந்து அரசியலைச் சந்தித்தால் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது. கமல் ஏற்கனவே கட்சி ஆரம்பித்து தேர்தலையே சந்தித்துவிட்டார். ஆனால், ரஜினி இன்னும் கட்சி தொடங்கவே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் கள அரசியலில் சீனியர் கமல்ஹாசன்தான். ஆனாலும் ரஜினியை முதல்வர் வேட்பாளராக கமல்ஹாசன் ஏற்பார் என்றும் அதற்குரிய பேச்சு வார்த்தைகளையும் காய்நகர்த்தல்களை ஐசரி கணேஷ் செய்து வருகிறார் என்றும் கூறுகிறார்கள் ரஜினி – கமல் வட்டாரத்தினர்.