ரஜினி எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி… எல்லாம் போச்சு..!

  0
  3
  ரஜினிகாந்த்

  தேர்தலில் போட்டியிட நினைத்த மன்ற நிர்வாகிகள் பலரும் ஏமாந்து போய் கிடக்கிறார்கள். கிடாய் சோறு போடுவதாக சொல்லி ஏமாற்றியதையும் அவ்வளவு எளிதாக மறந்து விடுவார்களா?

  நடிகர் ரஜினிகாந்த் முடிவால் அவரது ரசிகர்கள் ஏமாந்து கிடக்கிறார்கள். கடந்த 26 ஆண்டுகளாக ரஜினி ரசிகர்களுக்கு ஏமாறுவது தானே வழக்கம். ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பலரும், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பினார்கள். சென்னையில் குடிநீர் பஞ்சம் தீர்க்க, மன்ற நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்தார்கள். அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைத்தது.

  Rajini

   அத்தோடு நிறுத்தி விடாமல் மாநிலம் முழுவதுமே, ரஜினி ரசிகர்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருந்து வருகிறது. அதனால், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என  நிறைய பேர் ஆசைப்பட்டார்கள். ஆனால் கடந்த 7ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ‘உள்ளாட்சி தேர்தல்ல போட்டியிடுகிற எண்ணம் இல்லை’ என அறிவித்து விட்டார்.

  அதனால், தேர்தலில் போட்டியிட நினைத்த மன்ற நிர்வாகிகள் பலரும் ஏமாந்து போய் கிடக்கிறார்கள். கிடாய் சோறு போடுவதாக சொல்லி ஏமாற்றியதையும் அவ்வளவு எளிதாக மறந்து விடுவார்களா?