ரஜினி இனி சரிபட்டு வரமாட்டார்! தமிழக பாஜகவுக்கு பொறுப்பு தலைவர்களை நியமித்த தலைமை… 

  0
  4
  vanathi srinivasan

  தமிழக பாஜகவுக்கு பொறுப்பு தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

  இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “ திருவள்ளுவருக்கும், எனக்கும் காவி நிறத்தைப் பூச முயற்சி செய்கின்றனர். பா.ஜ.க எனக்கு எந்த அழைப்பும் கொடுக்கவில்லை. வள்ளுவர் ஞானி சித்தர், ஞானி சித்தர்களை ஒருகுறிப்பிட சாதி மதத்திற்குள் அடக்கி விட முடியாது. எனவே அவரையும் என்னையும் காவியாக்க முடியாது. ஆனால் தமிழகத்தில் தலைமை வெற்றிடமாக உள்ளது” என பேசினார்.

  Rajinikanth

  தமிழக பாஜகவின் தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் கடந்த செப்டம்பர் மாதம் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து, தமிழக பாஜக தலைவர் பொறுப்பு காலியாகவே இருந்தது. இந்த நிலையில், எம்.ஆர். காந்தி, பொன் ராதாகிருஷ்ணன், இல கணேசன், வானதி ஸ்ரீனிவாசன் ஆகிய பேர் தமிழக பாஜக பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளனர்.