ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    0
    9
    ஆர் பி உதயகுமார்

    ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 

    ரஜினி அரசியலுக்கு வருவதை வரவேற்கிறோம் என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 

    மதுரை திருமங்கலம் நகர் பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் விழாவை தொடங்கி வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர். பி உதயகுமார், “தமிழகத்தின் துணை முதலமைச்சர் பத்தாவது நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதில் 2 லட்சத்து 50ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோடிகளை தமிழ்நாட்டின் மக்கள் வளர்ச்சிக்காக நிதிநிலை அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை கவர்ச்சி திட்டங்கள் இல்லாமல் மக்களின் மனதை கவரும் திட்டங்களே அதிகமாக உள்ளது. செலவினங்களை கட்டுப்படுத்தி சமூகம்பாதுகாப்பு திட்டத்திற்காக ஒதுக்கீடுகளை உயர்த்திக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வருவாய் பற்றாக்குறை, நிதி பற்றாக்குறை கண்டிப்பாக இருக்கும். 

    ரஜினி

    விஜயகாந்த், கமல்ஹாசனை தொடர்ந்து மதுரையில் ரஜினியுடன் கட்சி தொடங்குவதால் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுமா கேள்விக்கு பதிலளித்த அவர், மதுரை தூங்காநகரம், கோயில் நகரம், ராசி நகரமாகவும் திகழ்கிறது. ஆனால் அவர்களுடைய ராசி உள்ளதா என்பது கட்சி தொடங்கிதற்கு பிறகுதான் தெரியும். பாரம்பரியத்திற்கும், பண்பாட்டிற்கும் இனிவரும் சன்னதியாக வரலாற்றையும் பண்பாட்டையும் வீரத்தையும் எடுத்துச் சொல்லுகின்ற வகையிலே இன்றைக்கு கீழடி காக நிதி ஒதுக்கீடு செய்து சிறந்த தமிழ் நாடாக திகழ்கிறது. ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம்,  மக்கள் பணியாற்ற வேண்டும், மக்கள் அங்கீகாரம் கொடுப்பதை மக்களோடு சேர்ந்து நாங்களும் பார்ப்பதற்கு ஆர்வத்தோட இருக்கிறோம்” எனக் கூறினார்.