ரஜினியை பெருசு என்று விமர்சிக்க உதயநிதிக்கு தகுதி இல்லை! – எஸ்.வி.சேகர் பேச்சு

  0
  1
  ரஜினி

  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்கள் வீட்டு பெட்ரூம் கதவை திறந்துவைத்துவிட்டே தூங்க வேண்டும், ரஜினியை விமர்சிக்க உதயநிதிக்கு தகுதி இல்லை என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தங்கள் வீட்டு பெட்ரூம் கதவை திறந்துவைத்துவிட்டே தூங்க வேண்டும், ரஜினியை விமர்சிக்க உதயநிதிக்கு தகுதி இல்லை என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

  udaya

  குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதில் குறிப்பிட்ட மூன்று நாடுகளிலிருந்து வரும் குறிப்பிட்ட மதத்தைத் தவிர மற்ற அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் மத ரீதியான பாகுபாடு ஏன் என்றும், பிற நாடுகளைச் சேர்ந்த இந்து உள்ளிட்ட மக்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கப்படுகிறது என்றும் கேட்டு எதிர்க்கட்சிகள் போராடி வருகின்றன. வங்கதேசத்திலிருந்து வந்த வங்க மொழி பேசும் இந்துக்களுக்கு அஸ்ஸாமில் குடியுரிமை வழங்கினால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அஸ்ஸாம் மக்கள் போராடி வருகின்றனர். ஆனால், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பதால் அதை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு சில அரசியல்வாதிகள் செயல்பட்டு வருகின்றனர். அதில் ஒருவர் நித்தியானந்தாவால் லெஜெண்ட் என்று புகழப்பட்ட எஸ்.வி.சேகரும் ஒருவர்.

  nithi

  குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தி.மு.க இன்று பேரணி நடத்திய சூழ்நிலையில், நிருபர்களுக்கு எஸ்.வி.சேகர் பேட்டி அளித்தார். அப்போது, “சி.ஏ.ஏ என்பது என்ன? வெளிநாடுகளில் மத ஒடுக்குமுறைக்கு ஆளானவர்கள் இந்தியாவுக்கு வந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது. இது எப்படி இந்தியாவில் இருப்பவர்களுக்கு, இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானதாக இருக்கும். இந்திய குடிமகனாக நீங்கள் இருந்தால் இந்த சட்டத்தைப் பற்றி ஏன் கவலை கொள்கிறீர்கள்.

  sv

  இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் தங்கள் வீட்டை பத்திரமாக பூட்டி வைத்துக் கொண்டு நாட்டைப் பற்றி கவலைப்படாதவர்கள். நாட்டில் யார் வந்தாலும் போனாலும் இவர்களுக்கு கவலையில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்கள் பெட்ரூம் கதவையும் திறந்துவைத்தே தூங்க வேண்டும். உதயநிதிக்கு ரஜினிகாந்த் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அவ்வளவ பெரிய நடிகரை கிழவன், பெருசு என்று சொல்வது சரியில்லை. நாளைக்கு உங்களுக்கும் வயதாகத்தான் போகிறது. அப்போது உங்களையும் ஒருவர் பார்த்து பெருசு என்றுதான் சொல்லப்போகிறார்” என்றார்.