‘ரஜினியின் மருமகனான தி.மு.க. வேட்பாளர்’ : வாக்குச்சாவடியில் அடம்பிடித்த மூதாட்டி

  0
  9
  நடிகர் தனுஷ்

  ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்க வந்த மூதாட்டி ரஜினி மருமகனுக்குத்  தான் ஓட்டுப் போடுவேன் என்று அடம்பிடித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

  ஸ்ரீவில்லிப்புத்தூர் : ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்களிக்க வந்த மூதாட்டி ரஜினி மருமகனுக்குத்  தான் ஓட்டுப் போடுவேன் என்று அடம்பிடித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. 

  நிறைவடைந்த தேர்தல் 

   

  vote

  தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் நடைபெற்ற இரண்டாம் கட்ட மக்களவை தேர்தல்  நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கி 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் பொதுமக்கள் மட்டுமின்றி திரை பிரபலங்கள் பலரும் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்களித்து விட்டு சென்றனர்.
  அதே போல் வயதானவர்களும், வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றி விட்டு சென்றனர்.

  அடம்பிடித்த மூதாட்டி 

  vote

  இந்நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் அடங்கிய ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஊரணி பற்றி கிராமத்தில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில் அதே பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் என்ற மூதாட்டி  வாக்களிக்க வந்தார்.

  வேட்பாளரான தனுஷ் 

   

  vote

  அப்போது பணியிலிருந்த அதிகாரிகளிடம் அந்த மூதாட்டி, ரஜினிகாந்தின் மருமகன் தனுஷ் எந்தச் சின்னத்தில் போட்டியிடுகிறார்? அந்த சின்னம் எங்கே என்று கேட்டார். மூதாட்டியின் இந்த கேள்வியைக் கேட்டு அங்கிருந்த அதிகாரிகள், திக்குமுக்காடிப் போயினர்.  இதைத் தொடர்ந்து மூதாட்டியிடம் நடிகர் தனுஷ் தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறி அதிகாரிகள் சமாதானம் செய்தனர். 

  இந்த விஷயம் தனுஷுக்கு தெரியுமா? 

  dhanush m kumar

  உண்மையில் தனுஷிற்கும் தென்காசி தொகுதி தேர்தலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது!?  ஸ்ரீவில்லிப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளவர்  தனுஷ் எம் குமார். அதைத் தான் மூதாட்டி நடிகர் தனுஷ் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். அல்லது அவரிடம் யாரேனும் தனுஷ் போட்டியிடுகிறார் என்று தவறான செய்தியைச் சொல்லியிருக்கலாம். அதனால் தான் மூதாட்டி  இப்படி கேள்வி எழுப்பியிருப்பார். அது இருக்கட்டும் இந்த விஷயம் தனுஷுக்கு தெரியுமா? 

  இதையும் வாசிக்க:  ஓட்டு போட்ட சின்மயியை கலாய்த்த பிரபல இயக்குநர்: கூட்டு சேர்ந்த ரசிகர்கள்!