ரஜினியின் எளிமை புகைப்படத்திற்கு பின்னிருக்கும் மர்மம்

  0
  14
  rajini

  நடிகர் ரஜினிகாந்த் மிக எளிமையான முறையில் இருக்கும் புகைப்படம் ஒன்று அவர் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. 

  நடிகர் ரஜினிகாந்த் மிக எளிமையான முறையில் இருக்கும் புகைப்படம் ஒன்று அவர் ரசிகர்கள் மத்தியில் வேகமாகப் பரவி வருகிறது. 

  சூப்பர் ஸ்டார் ரஜினி எளிமையான வாழ்க்கை முறைக்காக பெரிதும் பாராட்டப்படுபவர். அவரின் எளிமையைப் பறைசாற்றும்படி ஏதேனும் புகைப்படங்களோ செய்திகளோ வெளியானால் ரஜினி ரசிகர்கள் அதைப் பகிர்ந்து கொண்டாடுவார்கள்.

  rajini

  ரஜினி காந்த் இமயமலை செல்லும் சமயங்களில் இது போல அவர் சாதாரண மக்களுடன் பழகும் புகைப்படங்கள் வெளியாகி அவர் ரசிகர்களை உற்சாகப்படுத்தும். போலவே இப்பொழுது ரஜினி எளிமையாக உடை அணிந்து, சாதாரண பேசிக் ரக கைபேசியில் பேசும் புகைப்படம் ஒன்றை அவரது ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.

  rajini

  ஆனால், சில சமயங்களில் பிரபலங்களை போலவே தோற்றமளிக்கும் பொது மக்களின் படங்களும் இவ்வாறு பரவி விடும். அதிலும் திரைத்துறை சார்ந்த பிரபலங்களின் புகைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. இப்போது ரஜினியின் புகைப்படம் என்று இணையத்தில் பரவுவதும் ரஜினியின் உண்மையான புகைப்படம் அல்ல. அவரைப்போலவே தோற்றமளிக்கும் வேறு யாரோ ஒருவரின் படம் என்றும் தெரியவந்துள்ளது.