ரஜினியின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம்… ஆதித் தமிழர் கட்சியினர் கைது!

  0
  1
  ரஜினிகாந்த்

  பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறு கருத்துக்களைப் பரப்புவதாக இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

  பெரியார் குறித்து அவதூறு பேசியதாக  ரஜினியின் உருவ பொம்மையை ஆதித் தமிழர் கட்சியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

  துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், ‘ பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது என்றும் அந்த சிலைகளுக்குச்  செருப்பு மாலை போடப்பட்டது என்றும் பேசினார். பெரியார் குறித்து ரஜினிகாந்த் அவதூறு கருத்துக்களைப் பரப்புவதாக இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

  rrn

  இந்நிலையில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே பெரியாரைப் பற்றி ரஜினிகாந்த் தவறாக பேசி அவதூறு பரப்பி வருவதாக  நடிகர் ரஜினியின் உருவ பொம்மையை ஆதித் தமிழர் கட்சியினர் எரித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களைக்   கைது செய்தனர் .

  ttn

  முன்னதாக  தமிழகத்தில் 6 காவல்நிலையங்களில் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெரியகடை காவல் நிலையத்தில் தந்தை பெரியார்  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘பெரியார் குறித்து அவதூறாக பேசியதற்கு ரஜினி மன்னிப்பு கேட்கவிட்டால் அவரது வீட்டை வரும் 23 ஆம் தேதி முற்றுகையிடுவோம்’ என்று அக்கட்சியின் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.