ரஜினியால் சிக்கிய கொலை குற்றவாளி: அதிர வைக்கும் பின்னணி!?

  0
  1
  நெல்லூர் கொலை

  பெண்ணை கொன்ற குற்றவாளியை ரஜினி ஸ்டிக்கர் மூலம் போலீசார் பிடித்துள்ள சம்பவம் ஒன்று நெல்லூரில் நடந்துள்ளது. 

  நெல்லூர்:   பெண்ணை கொன்ற குற்றவாளியை ரஜினி ஸ்டிக்கர் மூலம் போலீசார் பிடித்துள்ள சம்பவம் ஒன்று நெல்லூரில் நடந்துள்ளது. 

  ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர் நிர்மலா பாய். இவர் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இவரது மகன் ஹைதராபாத்தில் வேலை பார்த்தும்,  மகள் திருப்பதியில் கல்லூரியும் படித்தும்  வருகின்றனர்.  இதனால் நிர்மலா தனியாக நெல்லூரில் வசித்து வந்துள்ளார். 

  murdeer

  இந்நிலையில் கடந்த மாதம்  நிர்மலா வீட்டிலிருந்து புகை வந்துள்ளது. இதனால்  அக்கம் பக்கத்தினர் அங்குச் சென்று பார்க்க, அவர்  மர்மமான முறையில், எரிந்து   கிடந்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிர்மலா உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர். 

  nellore

  இதையடுத்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் நிர்மலா கழுத்தில் கத்தி குத்து  இருந்தது தெரியவந்தது. இதனால் விசாரணையைத் தீவிர படுத்திய போலீசார், அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் சம்பவம் நடந்த அன்று, சந்தேகத்திற்குரிய வகையில் ரஜினி ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோ ஒன்று இருந்தது தெரியவந்தது. அந்த ஆட்டோவை போலீசார் விலைபோட்டுத் தேடி வந்தனர். 

  nellore

  இந்நிலையில் நேற்று நெல்லூர், முத்துகூர் சாலைப் பகுதியில் ஒரு ஆட்டோ, ரஜினி ஸ்டிக்கர் ஒட்டியபடி நிற்பதைப் பார்த்து ஆட்டோ டிரைவர் ராமசாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.இதைத்  தொடர்ந்து அவரிடம் நடத்திய  விசாரணையில்,  ‘ நிர்மலா பாய் வீட்டில் தனியாக இருப்பது தெரிந்து வீட்டிற்குள் நுழைந்த ராமசாமி, அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்த நகை மற்றும் பணத்தைத் திருடியுள்ளார். மேலும் கொலை சம்பவத்தைத் தற்கொலை போன்று மாற்ற கேஸ் சிலிண்டரை திறந்து பற்ற வைத்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.