ரஜினியால் அரை மணி நேரம்  கூட தனது நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை – சீமான் விமர்சனம்! 

  0
  7
  சீமான்

  அரை மணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்க முடியாததுதான் ரஜினியின் ஆளுமை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

  அரை மணி நேரம் கூட தனது கருத்தில் உறுதியாக நிற்க முடியாததுதான் ரஜினியின் ஆளுமை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 

  திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “மஹாராஷ்டிராவில் பாரதிய ஜனதா எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என்று காத்திருந்தனர். சிவசேனாவிற்கு உரிய அவகாசம் கொடுக்காமல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க முற்படுவது திட்டமிட்ட சதி. ரஜினியால் அரை மணி நேரம்  கூட தனது நிலைப்பாட்டில் நிற்க முடியவில்லை. வயது மூப்பின் காரணமாக தான் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற முதலமைச்சரின் கருத்துக்கு நான் உடன்படுகிறேன். தற்போது ஒரு வெற்றிடம் உள்ளது என்பதற்காகதான் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்கிறார்கள் என்றால் அவர்களுடைய எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது.

  Seeman

  உள்ளாட்சித் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி ஏற்கனவே  தயாராக உள்ளோம். கூட்டணிக்கு வாய்ப்பில்லை. பால் கவரில் திருக்குறள் இருப்பது பெருமை தான். ஆனால் வாங்குவார்கள் படிப்பார்களா? வரலாறு உள்ளவன் தேடுவான் இல்லாதவன் திருடுவான். பாஜக அனைத்தையும் தனதாக்க நினைக்கிறது. ஓபிஎஸ்க்கு விருது கொடுப்பது பாராட்டக் கூடிய ஒன்று. அமெரிக்க வாழ் தமிழர்கள் தான் விருது கொடுக்கிறார்கள். சிவாஜியின் அரசியல் குறித்து முதலமைச்சரின் கருத்து சிவாஜியை சிறுமைப்படுத்துவதாக உள்ளது. எம்ஜிஆரை போல சிவாஜிக்கு அரசியலில் நுட்பம் இல்லை. ஆனால் அவர் சிறந்த ஆளுமை” என தெரிவித்துள்ளார்.