ரஜினிக்கு ஆதரவாக களமிறங்கிய கமல்!

  0
  3
  Rajinikanth with kamalhassan

  நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது எனக்கூறியதை தாம் ஆமோதிக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

  நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளது எனக்கூறியதை தாம் ஆமோதிக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

  கடந்த சில நாட்களுக்கு முன் தனது போயஸ் கார்டன் இல்லம் முன்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், “தமிழக அரசியலில் ஆளுமைக்கான வெற்றிடம் காலியாக உள்ளது” என தெரிவித்திருந்தார். ரஜினியின் கருத்துக்கு அமைச்சர்கள் பலர் தமிழக அரசியல் வெற்றிடத்தை முதலமைச்சர் பழனிசாமி நிரப்பிவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து பழனிசாமியிடம் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை. நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகளே அதற்கு உதாரணம் என கூறியிருந்தார்.

  ரஜினி கமல்

  இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாமா என்பது குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறோம். முதல்வர் என்னை பற்றி  பேசியது அவரது கருத்து. நடிகர் ரஜினிகாந்த் கூறியது போன்று தற்பொழுதும் வெற்றிடம் என்பது உள்ளது. அவரது கருத்தை நான் ஆமோதிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.