ரஜினிகாந்திற்கு அதிமுக பாராட்டு!!

  0
  1
  Rajinikanth

  திமுகவின் முரசொலி நாளேட்டை விமர்சித்ததற்காக நடிகர் ரஜினிகாந்ததை அதிமுக பாராட்டியுள்ளது. 

  திமுகவின் முரசொலி நாளேட்டை விமர்சித்ததற்காக நடிகர் ரஜினிகாந்ததை அதிமுக பாராட்டியுள்ளது. 

  சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் பொன் விழாவில் பேசிய ரஜினிகாந்த், முரசொலியை படிப்பவர்கள் திமுககாரர்கள் என்றும் துக்ளக் இதழை படிப்பவர்கள் அறிவாளிகள் என்றும் கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்துவருகின்றனர். மேலும் இதற்காக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்திவருகின்றனர். 

  இந்நிலையில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா நாளேடின் ஆசிரியர் மருது.அழகுராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில், “தொண்டர்களிடம் வசூலித்த தொகையால் முரசொலி அறக்கட்டளை தொடங்குவதாக சொல்லிவிட்டு அதனை தங்களது குடும்பத்து தனிச்சொத்தாக்கிக் கொண்டவர்கள். அதற்கு ஆசிரியர் கூட அவர்கள் குடும்பத்தின் ஒருவராகத்தான் இருக்க முடியும். மொத்தத்தில் கருணாநிதி குடும்பத்திற்கான காகித காவடியே முரசொலி. இன்றைய செய்தி நாளைய வரலாறு என தலைப்பிட்டுக்கொண்டு, இன்றைய பொய்யை நாளைக்கு உண்மையாக்க தி.மு.க.வால் நடத்தப்படுகிற மூலப்பத்திர முரசொலியை படிப்பவர்கள் மூளைக்கெட்டவர்கள் என்பதனை விடுகதை பாணியில் போட்டுத் தாக்கியிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றால் அதனை பாராட்டத்தான் வேண்டும்..!” என பதிவிட்டுள்ளார்.