ரசிகர்களுக்கு க்ரீன் சிக்னல்… அரசியல் களத்தில் தளபதி விஜய்! 

  12
  தளபதி விஜய்

  நமது மக்கள் இயக்கத்தில் இருப்பதுபோலக் கட்டமைப்பு இல்லாத மக்கள் நீதி மய்யம், 12 இடங்களில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. நமது மக்கள் இயக்கத்தில் தற்போது, 145 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு பூத்துக்கு ஐந்து பேர் வீதம் கமிட்டி அமைத்துள்ளோம்.

  தமிழக அரசியலில் இப்போது தான் வெற்றிடம் உருவாகியிருக்கு. ஆனா ஜெயலலிதா, கருணாநிதி எல்லாம் இருந்தப்பவே ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமா மாற்றி அரசியலில் எங்க தலைவர் சிக்னல் கொடுத்திட்டார். அப்போ ஜெயலலிதாவின் வெற்றிக்கு எங்களோட பங்களிப்பும் இருந்துச்சு. அதன் பிறகு ‘தலைவா’ படத்துக்கு ‘டை டு லீட்’ங்கிற ஒத்த வரிக்கு எவ்வளவு பிரச்சனை பண்ணாங்க.. அப்போதே ரசிகர்கள் எல்லாம் ரொம்ப கொந்தளிச்சு, தேர்தல்ல எங்களோட பலத்தைக் காட்ட தயாரானோம். ஆனா பொறுமையா இருக்கச் சொன்ன தளபதியோட வார்த்தைக்கு மொத்த கூட்டமும் அமைதியானோம். இப்போ எங்களுக்கான நேரம் வந்துடுச்சு”  என்று உற்சாகமாக பேசுகிறார்கள் விஜய் ரசிகர்கள். 

  vijay

  எந்த பொது பிரச்சனைக்கும், ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பேசாமல் ஒளிந்துக் கொள்பவர் கிடையாது விஜய் சார். தூத்துக்குடியாகட்டும், மெரினா புரட்சியாகட்டும்… எப்பவுமே தமிழகத்துக்கு ஒரு பிரச்சனைன்னா நிச்சயமா களத்துல இருப்பார். வாரிசு அரசியல், தமிழர் கிடையாது, ஊழல் அரசியல்ன்னு எந்த காரணத்தையும் தேடி எங்களை எதிர்க்க முடியாது. வேணும்னா ஜோசப் விஜய்ன்னு சொல்லுவாங்க… அதான் தலைவரே ஜோசப் விஜய்ன்னு அறிக்கை வெளியிட்டாரே… மதங்களுக்கு அப்பாற்பட்டது எங்களோட இயக்கமும், செயலும்’ என்று தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் முஷ்டியை மடக்கி களத்தில் இறங்கியிருக்கிறார்கள் விஜய் மக்கள் மன்றத்தின் மாவட்ட தலைவர்கள்.

  vijay

  மாவட்ட வாரியாக நிர்வாகிகள் அனைவரும் விஜய்யின் பிறந்தநாள் நிகழ்வையொட்டி, பனையூரில் அவரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். பல விஷயங்களையும் பேசியவர்கள் அரசியலைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள். இது பற்றி டாப் தமிழ் நியூஸ் நிருபரிடம் மனம் திறந்த மாவட்ட நிர்வாகி, ‘சினிமாவில் நடித்தது போதும் என்று நினைக்கிறீர்களா?’ என்று விஜய் சார் கேட்டார். ‘அதெல்லாம் இல்லை. சினிமாவில் நடியுங்கள்… அரசியலிலும் எங்களுக்கு வழிகாட்டுங்கள்’ என்றோம். அத்துடன், ‘கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் இயக்கம் ஆகியவை, தனித்து நின்று 3.5 சதவிகித வாக்குகளை வாங்கியுள்ளன. நமது மக்கள் இயக்கத்தில் இருப்பதுபோலக் கட்டமைப்பு இல்லாத மக்கள் நீதி மய்யம், 12 இடங்களில் 3-ம் இடத்தைப் பிடித்துள்ளது. நமது மக்கள் இயக்கத்தில் தற்போது, 145 சட்டமன்றத் தொகுதிகளில் ஒரு பூத்துக்கு ஐந்து பேர் வீதம் கமிட்டி அமைத்துள்ளோம். இப்படிக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் செயல் வீரர்கள் பணி செய்கிறார்கள். இவர்களின் பணிகளைக் கண்காணிக்க சட்டமன்றத் தணிக்கைக் குழு மற்றும் ஒன்றிய கண்காணிப்புக் குழுக்களை அமைத்துள்ளோம். அனைத்துப் பணிகளையும் கணினியில் பதிவேற்றம் செய்துள்ளோம்’ என்று விளக்கிச் சொன்னோம் என்றார்.

  vijay

  நாம் விசாரித்த வரையில், ரசிகர்களின் கோரிக்கையையும், ஆர்வத்தையும் அலசிப் பார்த்து, ‘முதலில் உள்ளாட்சி தேர்தலில் பலத்தை நிரூபியுங்கள். ஆனால் ஆர்ப்பாட்டம் இருக்க கூடாது. உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஊழல் என்கிற பேச்சுக்கே இடம் இருக்க கூடாது. அப்படி ஏதாவது ஒரு விஷயத்தைக் கேள்விப் பட்டாலும் சட்டமன்ற தேர்தலில் நிச்சயமா அறிவிப்பு வெளிவராது. நம் மன்றத்தை சேர்ந்தவங்க யார் ஜெயிச்சாலும், அவங்களுக்கு என் கையால ஸ்பெஷல் பரிசு இருக்கு.. ஆனா தேர்தல்ல அடிதடி, சண்டை, வெட்டு குத்து, ஊழல்னு பேரைக் கெடுத்துக்கிட்டீங்கன்னா அதன் பிறகு மன்றத்து பக்கமே வரக்கூடாது’ என்றும் சிரித்துக் கொண்டே சிக்னல் கொடுத்திருக்கிறார் விஜய்.

  vijay

  விஜய்க்கு பிடித்த தலைவர்கள் காமராஜரும், எம்.ஜி.ஆரும். அடிக்கடி தன் படங்களிலும் எம்ஜிஆர் பாணியை பின்பற்றும் விஜய், ஆரம்பத்தில் இருந்தே விஜயகாந்தையும் பின்பற்றி வருகிறார். விஜயகாந்தைப் போலவே, உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர்களை சுயோட்சையாக களமிறக்கி பலத்தை நிரூபித்து ஜெயித்து காட்டச் சொல்லியிருக்கிறார். 
  விஜய் மக்கள் மன்றம் காஞ்சிபுரம், வட சென்னை, சேலம், நாமக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், கடலூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களில் நல்ல செல்வாக்குடன் இருக்கிறது. பல மாவட்டங்களில், தேர்தல் களத்தில் யார் வெற்றி பெறுவது என்பதை தீர்மானிக்கும் இடத்தில் விஜய் ரசிகர்கள் இருப்பது நிஜம் தான்.

  vijay

  விஜய் மன்றத்தை கவனித்து வரும் புஸ்ஸி ஆனந்த் பாண்டிசேரியில் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ வாக வெற்றி பெற்றவர். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முழு நேரமும் மன்றத்தை கவனித்து வருகிறார். இப்படி நிறைய  மாவட்டங்களில் கவுன்சிலரின் தம்பியாகவோ, மைத்துனராகவோ, நகராட்சி தலைவரின் மகனாகவோ, தங்கை மகனாகவோ விஜய் மன்ற தலைவர்கள் இருக்கிறார்கள். 10 வருடங்களுக்கு முன்பே விஜய், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக வங்கிக் கணக்கு துவங்கி, சரியான திட்டமிடலையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார். கஜா புயல் நிவாரணமாகட்டும், கேரள மழையாகட்டும், விஜய் செய்கிற உதவிகள் எல்லாம் அந்தந்த மன்றத்து வங்கி கணக்கிற்கு பணமாகச் செல்லும். களத்தில் மன்றத்து நிர்வாகிகள் உதவிகளைச் செய்வார்கள். 

  vijay

  நான் விசாரித்தவரையில், அரசியலில் விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரிலோ, சுயோச்சையாகவோ விஜய் ரசிகர்கள் சண்டையிடாமல் தேர்தல் களத்தில் ஒற்றுமையாக களமிறங்கினால், வருகிற உள்ளாட்சித் தேர்தலில் பல நகராட்சிகளிலும் மாநகராட்சிகளிலும் சேர்மன் மற்றும் மேயர் போன்றோரை நிர்ணயிக்கும் சக்தியாக உருவெடுப்பார்கள். 
  காலம் ரஜினிக்கு கொடுத்த வாய்ப்பை இப்பொழுது விஜய் பக்கம் தள்ளி விட்டிருக்கிறது. விஜய் எப்படி பயன்படுத்தப் போகிறாரோ?