ரக்க்ஷாபந்தன் வாழ்த்துகளுக்கு விதவிதமான ஸ்டிக்கர்கள் | களை கட்டும் வாட்ஸ் அப்

  0
  1
  ரக்‌ஷாபந்தன்

  இன்று சகோதர பாசத்தை வலியுறுத்தும் வகையில் ரக்‌ஷாபந்தன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ரக்க்ஷாபந்தன் வாழ்த்துக்களை ஸ்டிக்கர்களாக வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ள பிளே ஸ்டோரில், ரக்க்ஷாபந்தன் ஸ்டிக்கர்ஸ் 2019, ராக்கி ஸ்டிக்கர்ஸ் என்று அறிமுகப்படுத்தியுள்ளது. பயனாளர்கள் இதனை சர்ச் செய்து ரக்க்ஷாபந்தன் வாழ்த்துகளை பரிமாறிக்கொள்ளலாம்.

  raksha bandhan

  இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மூலமாக நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான தகவல்கள் வாட்ஸ் அப் மூலமாக பரிமாறப்பட்டு வருகின்றன. பண்டிகை நாட்களில், பரிமாறப்படும் தகவல்கள், வாழ்த்துகளின் எண்ணிக்கை பல கோடிகளை தாண்டுகிறது. வாழ்த்து அட்டைகளை காணாமல் போக செய்து, வாட்ஸ்அப்பில் பெரும்பாலும் தகவல்கள், வாழ்த்துகள் ஸ்டிக்கர்களாகவே பரிமாறப்பட்டு வருகின்றன.
  பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப் செயலியின் அப்டேட்களை அவ்வப்போது வழங்கி வருகின்றன. அந்த அப்டேட்களை நாம் தவறாது செய்துவந்தாலே, புதிய புதிய வசதிகளை பெறலாம். வாட்ஸ்அப்

  whatsapp

  செயலியில் ஏற்கனவே ஸ்டிக்கர்கள் வசதி உள்ள நிலையில், நமக்கு அதிக ஸ்டிக்கர்கள் தேவைப்படும் பட்சத்தில் பிளேஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். ரக்ஷா பந்தன் ஸ்டிக்கர்ஸ், ராகி ஸ்டிக்கர்ஸ் என சர்ச் செய்து அதை வாட்ஸ்அப்பில் இணைத்துக்கொண்டால், சாட் பாக்சில் அந்த ஸ்டிக்கர்கள் தோன்றும், நாம் அதை விரும்பிய நண்பர்களுக்கு அனுப்பி அவருடன் வாழ்த்துகளை பரிமாறிக்கலாம்.