ரஃபேல் ஒப்பந்த முறைகேடு: அனில் அம்பானிக்கு இத்தனை கோடி வரிவிலக்கா? அதிர வைக்கும் ரிப்போர்ட்!

  0
  2
  அனில் அம்பானி

  ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ. 1,100 கோடி அளவில் வரி விலக்கு அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  புதுதில்லி:  ரஃபேல் ஒப்பந்தத்தில் அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ரூ. 1,100 கோடி அளவில் வரி விலக்கு அளிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

  ரஃபேல் போர் விமானங்கள்  கொள்முதல் 

  rafale

   

  பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து அதிநவீன 36 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனமும் டசால்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிப்பு பணியை மேற்கொள்கிறது.

  ரஃபேல் ஊழல்

  rahul modi

  ஆனால், பிரான்ஸ் – இந்தியா இடையேயான ரஃபேல் போர் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாகவும், பெருமளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் தொடர் குற்றச் சாட்டுகளை முன் வைத்து வருகிறார். விமானம் வாங்குவதற்கு இதற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை அதிகம், டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக, அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் டிபென்சை, இந்த ஒப்பந்தத்தில் சேர்த்தது தவறு என ராகுல் கூறி வருகிறார். அதே சமயம்  ரஃபேல் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டதை விட இந்தியாவிற்கு அதிக செலவு ஏற்பட்டு உள்ளதாக 
  ‘தி இந்து’  மூத்த பத்திரிகையாளர் என்.ராம் குற்றச்சாட்டியுள்ளார்.

  ரஃபேல் ஆவணங்கள் மீதான விசாரணை நடத்தப்படும்

  sc

  ரஃபேல் போர் விமானக் கொள்முதல் வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்த ஆண்டு டிசம்பர் 14ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையில், கடந்த 10 ஆம் தேதி, ரஃபேல் ஆவணங்கள் மீதான விசாரணை நடத்தப்படும். சட்டவிரோதமாகப் பெறப்பட்ட ஆவணங்கள் மீது விசாரணை நடத்தக் கூடாது என மத்திய அரசு வைத்த கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர். மேலும் தி ஹிந்து செய்தித் தாளில் வெளியான ஆவணங்களும் விசாரணையின் போது எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

  அனில் அம்பானிக்கு ரூ.1100 கோடி வரிவிலக்கு 

  anil

  இந்நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மேலும் ஒரு புதிய தகவலை பிரான்ஸ் ‘Le Monde’ நாளேடு வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்தியா-பிரான்ஸ் இடையிலான ரஃபேல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட ஆறு மாதத்துக்குள், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது என்றும் கடந்த 2015 ஆம் ஆண்டு இது தொடர்பாக அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு சுமார், 1,100 கோடி ரூபாய் அளவில் வரி விலக்கு செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.

  ரஃபேல் ஒப்பந்தத்தில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள மத்திய அரசு அனில் அம்பானிக்கு   வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறித்து என்ன பதில் கூற போகிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

  இதையும் வாசிக்க: மீன் பிரியர்கள் நாளைக்கே நல்லா சாப்பிட்டுக்கோங்கோ… இதுக்கு அப்புறம் அவ்வளவு தான்!