ரஃபேலுக்கு ராஜ்நாத் சிங் பூஜை! கேலிசெய்தவர்களுக்கு பதிலடி !

  0
  5
  poojarajnathsing

  பிரான்ஸ் நாட்டில் முதல் ரஃபேல் விமானத்தை பெறும்போது ராஜ்நாத் சிங் பூஜை செய்ததை பார்த்து பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்த நிலையில் பதிலடி கொடுத்துள்ளார் அவர்.

  பிரான்ஸ் நாட்டில் முதல் ரஃபேல் விமானத்தை பெறும்போது ராஜ்நாத் சிங் பூஜை செய்ததை பார்த்து பல்வேறு தரப்பினர் விமர்சித்து வந்த நிலையில் பதிலடி கொடுத்துள்ளார் அவர்.

  rajnathsing

  இந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அதி நவீன வசதிகள் கொண்ட ரஃபேல் விமானம் வாங்க பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டு கடந்த வாரம் முதல் விமானம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போது ரஃபேல் விமானத்திற்கு சாஸ்த்ரா பூஜை செய்தார் ராஜ்நாத் சிங்.

  விமானங்களுக்கு மேல் பூ, தேங்காய் ஆகியவைகளை வைத்தும், அதன் சக்கரங்களுக்குக் கீழே எலுமிச்சைப் பழம் வைத்தும் பூஜை செய்தார். இந்த செயலை எதிர்க்கட்சி தலைவர்கள், சமூக வலைதளவாசிகள் விமர்சனம் செய்து வந்தனர். அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பிரான்ஸிலிருந்து திரும்பிய ராஜ்நாத் சிங் டெல்லி வந்ததும் பேட்டி அளித்தார். பூஜையில் அதிக சக்தி இருக்கிறது என்பது நம்முடைய நம்பிக்கை. இதை நான் சிறு வயதிலிருந்தே நம்பிக் கொண்டிருக்கிறேன்என்று கூறினார்.

  rajnath2

  இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்தத் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, ”ராஜ்நாத் சிங் பூஜை செய்தது நாடகம் என்றும் காங்கிரஸ் ஆட்சியில் இதுபோன்று பூஜைகள் செய்ததில்லை என்றும் விமர்சித்திருந்தார். அதே சமயம் மற்றொரு காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம், ”சாஸ்த்ரா பூஜை நமது நாட்டின் பழைய பண்பாடு; கார்கே ஒரு நாத்திகவாதி என்பதனால் அவ்வாறு கூறுகிறார். காங்கிரஸிலிருக்கும் அனைவரும் நாத்திகவாதி கிடையாதுஎன்று கூறியிருந்தார். ஒருவேளை மற்ற மதத்தை அடிப்படையாக கொண்ட நாடுகள் விமானம் வாங்கியிருந்தால் அவரவர் கடவுளை பிரார்த்திக்காமல் வாங்கியிருப்பார்களா என மற்றொரு தரப்பினர் கேள்வி எழுப்பினர்.