யோகி ஆதித்யநாத்தின் தந்தை டெல்லியில் இன்று காலமானார்

  0
  4
  yogi adithyanath

  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த். இவர் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.44-க்கு அவர் உயிர் பிரிந்தது.

  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த் இன்று காலமானார் அவருக்கு வயது 89.
  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் தந்தை ஆனந்த் சிங் பிஷ்த். இவர் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று காலை 10.44-க்கு அவர் உயிர் பிரிந்தது. இந்த தகவலை உத்தரப்பிரதேச மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

  yogi-adithyanath

  யோகி ஆதித்யநாத்தின் தந்தை ஆனந்த் சிங் வனத்துறையில் ரேஞ்சராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பாதிப்புகள் அவருக்கு இருந்து வந்துள்ளது. இதனால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவ்வப்போது அனுமதித்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் 13ம் தேதி அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை மோசமானதால் அவருக்கு செயற்கை சுவாச கருவியான வென்டிலேட்டர் பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.

  கொரோனா நோய்த் தடுப்பு தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசனை நடத்திவந்த நிலையில் தந்தையின் மரணம் பற்றிய தகவல் அவருக்கு சொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.