யோகா வீடியோவுக்காக மோடிக்கு நன்றி சொன்ன இவாங்கா டிரம்ப்!

  0
  2
  ivanka trump

  பிரதமர் மோடி அனிமேஷன் யோகா வீடியோவை வெளியிட்டதற்கு அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.

  modi-yoga-video-7

  ஊரடங்கு நேரத்தில் மன அழுத்தத்தைப் போக்கவும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் யோகா செய்யலாம் என்று கூறி பிரதமர் மோடி அனிமேஷன் வீடியோக்களை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். எனக்கு நேரம் கிடைக்கும்போது எல்லாம் யோகா செய்வேன் என்றும், யோகாவால் பலன்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். 
  பிரதமர் மோடி வெளியிட்டிருந்த ட்வீட்டை அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் ரீட்வீட் செய்துள்ளார். அதில், “இது மிகவும் அருமையானது, தங்களுக்கு நன்றி” என்று கூறி மோடியை டேக் செய்துள்ளார்.