யோகா செய்திருந்தால் ராகுல் ஜெயிச்சிருப்பார்- பாபா ராம்தேவ்

  0
  1
  baba ramdev

  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வி அடைந்ததற்கு காரணம் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி யோகா செய்யாதது தான் காரணம் என யோகா குரு பாபா ராம்தேவ் புதிய விளக்கமளித்துள்ளார். 

  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சந்தித்த தோல்வி அடைந்ததற்கு காரணம் அக்கட்சி தலைவர் ராகுல் காந்தி யோகா செய்யாதது தான் காரணம் என யோகா குரு பாபா ராம்தேவ் புதிய விளக்கமளித்துள்ளார். 

  மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ராகுல் காந்தி தலைமையில் சந்தித்தது. எனினும், காங்கிரஸ் கூட்டணி படுத்தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்வியை அடுத்து தனது தலைமை பதவியை ராகுல் காந்தி விடத்துணிந்தார்.  இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு புதிய காரணம் குறித்து யோகா குரு  பாபா ராம்தேவ் விளக்கமளித்துள்ளார். நாளை உலக சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

  இந்நிலையில் யோகாவின் சிறப்புகளை பல தலைவர்களும் எடுத்துரைத்து வருகின்றனர். இந்நிலையில் யோகா குரு பாபா ராம்தேவ், “பிரதமர் மோடி தினசரி யோகா செய்பவர். அதேபோல் நேருவும், இந்திரா காந்தியும் யோகா செய்யும் பழக்கம் கொண்டவர்கள். ஆனால் ராகுல்காந்தி ஒரு நாள் கூட யோகா செய்ததில்லை. அதுவே அவரது தோல்விக்கு காரணம். யோகா செய்பவர்தான் வாழ்வில் வெற்றிப்பெறுவார்” என கூறினார்.