யோகா அனிமேஷன் வீடியோவை வெளியிட்ட மோடி!

  0
  14
  modi-animation-video

  கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூலித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யோகா செய்வது போன்ற அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

  பிரதமர் மோடி யோகா செய்வது போன்ற அனிமேஷன் வீடியோ பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
  கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கூலித் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அவதியுற்று வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் யோகா செய்வது போன்ற அனிமேஷன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், நேற்று மான்கிபாத் நிகழ்ச்சியில் ஒருவர் இந்த காலகட்டத்தில் என்னுடைய தினசரி ஃபிட்னெஸ் பயிற்சி பற்றி கேட்டிருந்தார். அதனால் யோகா வீடியோவை வெளியிடுகிறேன். இதை நீங்கள் அனைவரும் தினசரி செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

  மற்றொரு பதில், “நான் ஃபிட்னெஸ் வல்லுநரோ மருத்துவ வல்லுநரோ இல்லை. பல ஆண்டுகளாக தினமும் யோகா பயிற்சி செய்வது என்னுடைய வாழ்வின் ஒரு பகுதியாக உள்ளது. இதில் நன்மைகளையும் கண்டறிந்துள்ளேன். உங்களில் பலர் மற்ற வழிகளிலும் ஃபிட்டாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன், இதை மற்றவர்களுக்கு நீங்கள் ஷேர் செய்ய வேண்டும். இந்த யோகா வீடியோக்கள் பல மொழிகளிலும் உள்ளன. பாருங்கள், மகிழ்ச்சியாக யோக பயிற்சி செய்யுங்கள்” என்று கூறியுள்ளார்.