யெஸ் பேங்க் கற்று கொடுத்த பாடம்…. இனி பணத்தை தனியார் பேங்க்ல போடாதீங்க….. அனைத்து துறைகளுக்கும் மகாராஷ்டிரா அரசு உத்தரவு…

  0
  4
  யெஸ் பேங்க்

  மகாராஷ்டிராவில் அனைத்து துறைகளும் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளும் இனி பணத்தை தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்யக்கூடாது. பொதுத்துறை வங்கிகளில்தான் டெபாசிட் செய்ய வேண்டும் என அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

  தனியார் வங்கியான யெஸ் பேங்கின் மோசமான நிதி நிலைமை காரணம் காட்டி ரிசர்வ் வங்கி கடந்த வாரம் அந்த வங்கிக்கு தடை விதித்தது. மேலும் யெஸ் பேங்கின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் ரிசர்வ் வங்கி கொண்டு வந்தது. யெஸ் பேங்க் விவகாரத்தில் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, மகாராஷ்டிரா மாநில அரசும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

  யெஸ் பேங்க்

  மகாராஷ்டிராவில் உள்ள 100க்கும் மேற்பட்ட சிறு வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் தங்களுக்கு வருவாயை யெஸ் பேங்கில் டெபாசிட் செய்து வந்தனர். தற்போது யெஸ் பேங்க் பிரச்சினையால் டெபாசிட் செய்த பணத்தை அவற்றால் திரும்ப எடுக்க முடியாமல் தவித்து வருகின்றன. மேலும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும் அம்மாநில அரசின் நடவடிக்கைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

  எஸ்.பி.ஐ.

  யெஸ் பேங்க் பிரச்சினையால் கிடைத்த அனுபவத்தில் நல்ல பாடத்தை மகாராஷ்டிரா அரசு கற்று கொண்டது. மகாராஷ்டிராவின் தலைமை செயலர் அஜோய் மேத்தா இது குறித்து கூறுகையில், நாங்கள் ஏற்கனவே மாநிலத்தில் உள்ள அனைத்து துறைகளும், உள்ளாட்சி அமைப்புகளும் இனி தனியார் வங்கிகளில் டெபாசிட் செய்ய கூடாது. தேசிய உடைமையாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவு வெளியிட்டுள்ளோம் என தெரிவித்தார்.