யூடியூபில் சாதனை மேல் சாதனை  படைத்தது வரும் தனுஷின் ரவுடி பேபி பாடல் 

  0
  1
  ரவுடி பேபி

  ரவுடி பேபி பாடல் 600மில்லியன் புதிய சாதனை படைத்துள்ளது.

  சென்னை: ரவுடி பேபி பாடல் 600மில்லியன் பார்வையாளர்கள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

  நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. இதில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி ஆட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். இவருடன் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.10 ஆண்டுகளுக்குப் பிறகு யுவன்- தனுஷ் காம்போவில் உருவான இப்படத்தில், இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் அனைவரையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. தனுஷ் எழுதி பாடிய  இப்பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். 

  இந்த நிலையில் இப்பாடல் யூடியூப்பில் சாதனை மேல் சாதனை படைத்தது வருகிறது. அந்த வகையில் தற்போது வரை 600 மில்லியன் பேர் இந்தப் பாடலை யூடியூப்பில் பார்த்து ரசித்துள்ளனர். அதைத்தொடர்ந்து ட்விட்டரில் #rowdybaby என்ற ஹாஸ் டாக் ட்ரெண்டாகி வருகிறது. 

  முன்னதாக இந்த பாடல் வெளியான 41 நாட்களில் 200 மில்லியன் பார்வையாளர்களையும், 69 நாட்களில் 300 மில்லியன் பார்வையாளர்களையும், 104 நாட்களில் 400 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.